பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி, சாப்பிடச் செய்தாள். தங்கை தன்னிடம் கொண்டிருந்த அன்பையும், தான் அவளிடம் நடந்து கொண்ட மூர்க்கத்தனத்தையும் உணர்ந்தாள். அவள் கண்களில் நீர்மல்கியது.

“இனி, உன்னோடு ஒரு போதும் சண்டையிட மாட்டேன், இது உறுதி!” என்றாள் அக்காள்.

ரத்த பாசம் என்பது இதுதான்!


22
முதலாளி சொல்லாத வழி

பம்பாயில் வியாபாரம் செய்யும் ஒரு பணக்காரர், தன்னுடைய கிராமத்திலிருந்து வீட்டுவேலைக்காக, ஒரு இளைஞனை பம்பாய்க்குக் கூட்டிச் சென்றார்.

அவனுக்கு தன் கிராமத்தைத் தவிர வேறு ஊர் எதுவும் தெரியாது. அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

பம்பாய் சென்றதும் அவனிடம், “அடே! இது பெரிய நகரம்; கார்கள், ஸ்கூட்டர்கள், டிராம், பஸ்கள் நிறைய போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருக்கும். கடைகளுக்குப் போகும் போது, மிகவும் கவனமாகப் போய் வரவேண்டும். இடது பக்கம் கார், ஸ்கூட்டர் முதலியன வந்தால், வலது பக்கம் போக வேண்டும், வலது பக்கம் கார் முதலியன வந்தால், இடது பக்கம் போக வேண்டும்” என்று சொன்னார் வியாபாரி.

அவனும் கவனமாகக் கேட்டுக் கொண்டான்

ஒரு வாரத்திற்குப் பிறகு ஒருநாள் காலையில், வியாபாரி வீட்டுக்கு ஒரு காவலர் வந்து உங்கள் “வேலைக்காரன் கார்