பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

விபத்துக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறான்” என்று தெரிவித்தார்.

வியாபாரி உடனே மருத்துவ மனைக்குச் சென்று, அவனைப் பார்த்து ஆறுதல் கூறினார். “நான் சொன்னபடி நீ நடந்து கொண்டிருந்தால், இப்படி விபத்துக்கு ஆளாகி இருக்கமாட்டாயே” என்றார்.

படுக்கையில் படுத்திருந்த வேலைக்காரன், “முதலாளி! நீங்கள் சொல்லியபடி நடந்து கொண்டதால் தான் இப்படி விபத்து நடந்தது. இடதுபக்கம் ஒரு கார் வந்தது, வலது பக்கமும் ஒரு கார் வந்தது, நான் நடுவில் சென்றேன்” என்றான்.

முதலாளி சொல்லாத வழியில் அவன் சென்றான் போலும்


23
பணத்தைச் சேமித்தது எப்படி?

பெரியவர் ஒருவர் தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

அவனுக்கு வருவாய் கிடைக்க வழியையும் ஏற்படுத்தி, தனிக் குடித்தனம் அமைத்து கொடுத்தார்.

அவ்வப்போது வந்து மகனைப் பார்த்துச் செல்வார் தந்தை ஒரு நாள் தந்தை வந்திருந்தார். இரவு நேரம், தந்தையும் மகனும் பேசிக் கொண்டிருந்தனர்.

“அப்பா! நீங்கள் எப்படி பணத்தைச் சேர்த்தீர்கள்? என்னுடைய வருமானத்துடன், உங்களுடைய உதவி இருந்தும்,எனக்கு ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறதே, ஏன்?” என்று கேட்டான் மகன்.