பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

ஒரு நாள், பாத்திரம் நிறைய பொன்னும் மணியும் போட்டு, அதை இறுக மூடி, காவலாளி வீட்டுக்குச் செல்லும் போது, அவனுக்குப் பரிசாகக் கொடுத்தான் அரசன்.

அதைப் பெற்றுக் கொண்டு காவலாளி வீட்டுக்குச் செல்லும்போது, ஒரு துறவி ஒரு பொன்னைக் கொடுத்துவிட்டு, அவனிடமிருந்த பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டான்.

பாத்திரத்தில் இருந்தது என்ன என்பது அவனுக்குத் தெரியாததால், ஒரு பொன்னை பெரிதாக நினைத்து மகிழ்ந்தான். அந்தப் பாத்திரத்தை துறவி அரசனிடம் கொண்டுபோய்க் கொடுத்து இனாம் பெற்றுச் சென்றான்.

மறுநாளும், ஒரு பாத்திரத்தில் சில பொருள்களை வைத்து மூடி காவலாளி தத்தனிடம் கொடுத்தான் அரசன். - அதையும் அரசாங்க ஊழியன் ஒருவன், இரண்டு பொன்களைக் கொடுத்து அவனிடமிருந்து பெற்றுக் கொண்டு சென்றான்.

அதைக் கொண்டு போய் அவன் அரசனிடம் கொடுத்து இனாம் பெற்றான்.

மூன்றாம் நாளும், ஒரு பாத்திரத்தில் ஒரு முத்து மாலையை வைத்து காவலாளியிடம் கொடுத்தான் அரசன்.

மற்றொரு அரசாங்க ஊழியன் மூன்று பொன்னைக் கொடுத்து, காலவாளியிடமிருந்து பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டு சென்று, அரசனிடம் கொடுத்தான்.

காவலாளி தத்தனின் வறுமை நீங்கவில்லை என்பதையும், அவன் ஆசைப்படவில்லை என்பதையும் அரசன் உணர்ந்தான்.

மீண்டும் ஒரு பாத்திரத்தில் பொன்னும் பொருளும் வைத்து,