பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தத்தனுக்குக் கொடுத்தான். அவன் அரசனை வணங்கி, அதை வாங்கும் போது, பாத்திரத்தின் மூடிதிறந்து, அதில் உள்ள பொன்னும் பொருளும் கீழே விழுந்தன.

அப்போது தான் காவலாளி தத்தனுக்கு உண்மை தெரிய வந்தது.

அரசன் மூன்று தடவை கொடுத்த பாத்திரங்களை தன்னுடைய வறுமைப் புத்தியினால் என்ன இருக்கிறது என்று பாராமல் அப்படியே, கொடுத்து விட்ட முட்டாள் தனத்தை நினைத்து, தன்னை நொந்து கொண்டான் தத்தன்.

இம்முறை பாத்திரம் தத்தனிடம் சேர்ந்தது. அதில் உள்ளதை அவன் உணரச் செய்ததை எண்ணி அரசன் மகிழ்ந்தான். மனநிறைவு பெற்றான்.

வறுமையில் வாடுபவன் கிடைத்தது போதும் என்று நினைப்பான்.


25
பெரிய வாயாடி

ஒரு ஊரில் ஒரு பிராமணரும் அவர் மனைவியும் வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தனர்.

அவர் புரோகிதர் வேலைக்குச் செல்வார். அந்த வேலை கிடைக்காத போது, சமையல் வேலை பார்ப்பதும் உண்டு.

அவர்களுக்கு குழந்தை இல்லை அவருடைய மனைவி பெரிய வாயாடி, யாரிடமாவது ஏதேனும்பேசி, வம்பளத்து கொண்டிருப்பாள். அதனால் அவளுடன் யாருமே பேசுவது இல்லை.