பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

இளைஞன், தான் முதன்முதலில் வந்து, செத்த எலியைக் கொண்டு சென்றது முதல் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்.

அவனுடைய ஊக்கத்தையும், உழைப்பையும், நாணயத்தையும் கண்டு செட்டியார் அவனைப் பாராட்டி மகிழ்ந்தார்.

அதன்பின், தன்னுடைய ஒரே மகளை, அந்த இளைஞனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார் செட்டியார்.

ஊக்கமும், உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால், எப்படியும் முன்னேறலாம்.


29
உண்மையான நண்பன்

ஒரு செல்வந்தர் வீட்டில் தெண்டன் என்பவன் காவலாளியாக வேலை பார்த்து வந்தான்.

தினமும் அவன் வீட்டுக்குத் திரும்பும் போது, மது அருந்தி வயிறு நிறையச் சாப்பிட்டு வருவான்.

அவன் மனைவி, “தினமும் இப்படிக் குடித்துவிட்டு, தின்னுவிட்டு வருகிறாயே? உன்னுடைய சம்பளம் இதற்கே போய் விட்டால், குடும்பத்தை எப்படி நடத்துவது?” என்று கடிந்து கொண்டான்.

அதற்கு தெண்டன், “நான் வேலை செய்யும் வீட்டில், சிங்கன், வீரன் என இருவர் தோட்ட வேலை பார்க்கின்றனர். அவர்கள் இருவரும் என்னிடம் மிகுந்த பிரியம் உடையவர்கள். சிங்கன் எனக்கு மதுவும், உணவும் அளிப்பான். வீரனோ தன் உயிரையே கொடுக்கக் கூடியவன்.” என்று கூறினான்.