பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

கண்டு துள்ளிக் குதித்தது. அப்பொழுது, ஆந்தையும் கீரியும் சேர்ந்து சென்ற போது பூனை கண்ணியில் சிக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தன. இனி, பூனையைப் பற்றிய பயம் இல்லை. எலியைப் பிடித்து விடலாம் என்று எண்ணின.

தன்னைக் குறி வைத்து ஆந்தையும், கீரியும் வருவதைக் கண்டு எலி நடுங்கியது, கீரிக்கும் ஆந்தைக்கும் பயந்து எலி, வழியை மாற்றிக் கொண்டு, பூனையின் பக்கம் சென்றது, பூனையின் கால்கள் கண்ணியில் சிக்கிக் கொண்டிருந்த போதிலும், ஒரே அறையில் கொன்று விடுமே என்று கலக்கமுற்று, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.

பூனையின் அருகில் சென்று, “நீ என் எதிரியாக இருந்தாலும்கூட, இப்போது நீ சிக்கிப் பரிதவிப்பதைக் காணும் போது, எனக்கு இரக்கமேலிடுகிறது. என் பற்களால் இந்தக் கண்ணியை கடித்து உன்னை விடுவித்து விடுகிறேன். ஆனால், நீ விடுபட்டதும், உன்னால் எனக்கு ஆபத்து நேரிடுமோ என்று தான் பயமாக இருக்கிறது” என்றது எலி,

“எலியே! நாம் எதிரிகளான போதிலும், இப்பொழுது என்னை நீ விடுவித்து விட்டால், உனக்கு நண்பனாக இருப்பேன். ஆபத்தான வேளையில் என் உயிரைக் காப்பாற்றிய உன்னை ஒருபோதும் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று உறுதி அளிக்கின்றேன்” என்று கெஞ்சியது பூனை.

உடனே எலி பூனையை நெருங்கியது. அதைக் கண்ட கீரியும், ஆந்தையும் எலியைப் பிடிக்க வழியில்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விட்டன.

எலியிடம், “சீக்கிரம் பற்களால் கண்ணியை அறுத்து விடு, விடியப் போகிறது, வேடன் வந்து விடுவானே என்று அவசரப்படுத்தியது, பூனை