பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

விடுவதும் ரொம்பவும் சிரமமாக இருக்கிறது” என்று சங்கடப்பட்டான்.

அதற்குச் செட்டியார், “கெளரவமாக வாழ்ந்தேன். கார் வைத்துக் கொண்டிருப்பதால் பெருமை இருக்கிறது; ஊரார், உறவினர் மதிப்பு வைத்திருக்கின்றனர்.

நல்ல செழிப்புள்ள குடும்பத்திலிருந்து, உனக்குப் பெண்ணைக் கொடுக்க முன்வருவார்கள். திருமணம் நடந்த பின், காரை விற்று விடலாம்” என்றார்.

நொடித்துப் போனாலும், சிலர் கெளரவத்துடன் இருப்பதாக வெளியில் காட்டிக் கொள்வது இயல்பு. அது ஒரு போலியான வாழ்க்கை!


44
எளியவர்களால் உதவ முடியும்

செடி, கொடி, மரங்கள் அடர்ந்த பெரிய காடு. அங்கு ஆண் சிங்கம் ஒன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது

அப்போது கண்டெலி ஒன்று, தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தின் மேல் ஏறி விளையாடியது.

அதனால் சிங்கத்தின் தூக்கம் கலைந்தது. சினம் பொங்கியது, கண்கள் சிவந்தன. சுண்டெலியைக் கடுமையாகப் பார்த்தது.

கண்டெலி அஞ்சி நடுங்கியது. சிங்கத்தின் காலடியில் வீழ்ந்து “வனராஜனே! என்னை மன்னித்து விடு, எப்போதாவது நன்றி மறவாமல், உனக்கு உதவி செய்வேன்” என்று மன்றாடியது.