பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

சுகமாக இருக்கிறீர்கள், எனக்கு ஏற்படக் கூடிய பாவத்தில் (தண்டனை) உங்களுக்குப் பங்கு உண்டா? ஏற்பீர்களா?” என்று கேட்டான்.

“அது எப்படி முடியும்? உன் தண்டனை உன்னோடுதான்! நீ கொண்டு வந்து தருகிறாய் நாங்கள் அதை அனுபவிக்கிறோம்” என்று கூறினர்.

அப்பொழுதே, கொள்ளைக்காரனுக்கு அறிவு வேலை செய்யத் தொடங்கி விட்டது.

பெரியவரிடம் வந்து வணங்கி, “உங்களுடனே நான் வருகிறேன்!” என்று கூறி, பெரியவரைப் பின் தொடர்ந்தான் கொள்ளைக்காரன்.


57. எதைத் திருடினான்?

ஒரு வணிகன் முக்கிய உணவுப் பொருள்களை அடுத்த ஊர் சந்தைக்குக் கொண்டு போய் நல்ல விலைக்கு விற்று பணத்தை ஒரு பையில் போட்டுப் பூட்டிக் கொண்டு ஊருக்குத் திரும்பினான்.

வழியில் ஒரு கோயிலைக் கண்டான் அங்கே போய் வணங்கிவிட்டுத் திரும்பச் சென்றான். பணப்பையை கோயிலில் மறந்து வைத்து விட்டான்.

கோயிலுக்கு வந்த பள்ளி ஆசிரியர் கடவுளை வணங்கி திரும்பும்போது அந்தத் தோல் பையைப் பார்த்தார். அருகில் எவரும் இல்லாததால், அதை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். அவருடைய வீடு கோயில் வீதியிலேயே இருந்தது. வீட்டிற்குப்