பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

94

கிடைத்திருக்கிறதே. அது நம் கண்ணில் படவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.

பொட்டலத்திலிருந்த பதார்த்தத்தை எடுத்து சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் பிரியத்தோடு வற்புறுத்தி, கொஞ்ச கொஞ்சம் கொடுத்து தானும் உண்டான்.

சகோதரர்கள் மூத்தவனிடம், “நாளை முதல் நீ உழுவதற்கு வரவேண்டாம். முன் போலவே, வீட்டிலேயே இருந்து வழக்கம்போல் காரியங்களை பார்த்துக்கொள். எங்களுக்குப் பொறாமை இல்லை, அவரவர்களுக்கு உள்ளதுதான் கிடைக்கும்” என்று கூறினார்கள்.


59. எது நியாயம்?

ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுடைய நிலத்தின் ஒரு பகுதியை, அடுத்த நிலத்துக்காரன் தன்னுடைய நிலத்தோடு சேர்த்துக் கொண்டு உழுது பயிரிட்டு வந்தான்.

“என்னுடைய நிலத்தின் பகுதியை, நீ உன்னுடைய நிலத்தோடு சேர்த்துக் கொள்ளலாமா? இது நியாயமா?” என்று கேட்டான்.

“நியாயம் அநியாயம் என்பது எனக்குத் தேவையில்லை. அது என்னுடைய நிலத்தை ஒட்டியிருப்பதால், அது எனக்கே சொந்தமானது” என்று முரட்டுத்தனமாகப் பதில் சொன்னான்.

கிராமப் பஞ்சாயத்தாரிடம் போய் முறையிட்டான். அவர்கள் அவனை வரவழைத்து விசாரித்தார்கள். “அது என்னைச் சேர்ந்தது. திருப்பிக் கொடுக்க முடியாது” என்று மறுத்து விட்டான்.