பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

நிலத்தை இழந்தவன் மிகவும் வருத்தத்தோடு இருந்தான். அவன் மனைவி, “அவனை சும்மா விட்டுவிடக் கூடாது. நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுநியாயம் கேட்கவேண்டும்” என்று யோசனை சொன்னாள்.

விவசாயி உடனே ஒரு வழக்கறிஞரிடம் போய் விவரம் கூறி, வழக்குத் தொடுத்தான்.

நீதிமன்றத்திலே நிலத்தை இழந்த விவசாயிக்குப் பாதகமாக தீர்ப்புக் கிடைத்தது.

“அதற்கு மேல் ஒரு நீதிமன்றம் இருக்கிறது; அங்கே போய் வாதாடலாம்” என்றார் வழக்கறிஞர். அதன்படி அங்கே போய் வாதாடியதில் அதிலும் பாதகமாக தீர்ப்புக் கிடைத்தது.

“இன்னொரு நீதிமன்றம் இருக்கிறது. அதில் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்” என்றார் வழக்கறிஞர்.

விவசாயி, “ஐயா, நான் இழந்த நிலம் சிறு பகுதிதான். அதை மீட்பதற்காக, நான் செலவு செய்த பணம் அந்த நிலத்தின் விலை மதிப்பைக் காட்டிலும் நான்கு மடங்கு ஆகும். மேலும், என்னுடைய விவசாய வேலைகளையும் கவனிக்க முடியாமல் அது வேறு நஷ்டம்! முட்டாள்தனம் செய்து விட்டேன். இனி, இன்னொரு நீதிமன்றத்துக்குப் போகவும் வழக்காடவும் என்னிடம் ஒரு காசு கூட இல்லை. அநியாயக்காரனைக் கடவுள் தண்டிக்கட்டும் என்றான்.