பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகத்தோல்

11

அகர வரிசை



அகத்தோல் - உட்தோல் endodermis. தாவரத் திசுக்களிலுள்ள ஓரடுக்கு. This is a layer in plant tissues. ஒ. புறத்தோல்,

அகதி - ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் அடைக்கலம் புகுபவர். refugee, Sri Lankan refugees.

அகதி முகாம் - அகதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள தனி இடம். refugee's camp. (e.g.) Mandapam

அகந்தை - செருக்கு அகம்பாவம், ego. This is a negative quality.

அகநகர் - கோட்டையின் உள் இருக்கும் நகரப்பகுதி. Inner city surrounded by a fort.

அகநகை - ஏளனச் சிரிப்பு, derisive laughter, ஏன் இந்த அக நகை? Why this derisive taughter?

அகநிலை, அகவயம் - உள்நோக்குத் தன்மையுள்ளது; உணர்ச்சிக்குட்படுவது, subjective feeling. This is biased in nature.

அக நோக்கர் - தன் நலத்தைப் பற்றியே நினைப்பவர். Introvert. A self-interested person. ஒ. புற நோக்கர்,

அகநோக்கு- தன்னைப் பற்றிய எண்ணம் Introspection. This is the process of seeing oneself. ஒ. புறநோக்கு.

அகப்பகை - உட்பகை, enmityWithin, hatred among relatives.

அகப்பற்று - நான் என்னும் மனப்பற்று, attachment to self, self-love. This is a sort of ego.

அகப்பாட்டு - அகப்பொருள் பற்றிய பாட்டு.(எ.டு) அகநானுறு. LOVE poem in Tamil Literature. (e.g.) Akananuru ; ஒ. புறப்பாட்டு.

அகப்பை - உண்ணும் நீர்மப் பொருளை எடுக்கும் கரண்டி . ladle. This is useful for serving liquid food.

அகப்பொருள்- அக ஒழுக்கமாகிய காதல், love. This is the sum and Substance of Tamil Literature.

அகம் - உள்ளம், மனம், நெஞ்சம் mind. This is a vital function of the brain.

அகம்- உள்ளே, He is inside.

அகம் - வீடு, இல்லம், house it is a country house.

அகம் - அகப்பாட்டு, love poem.

அகம் - இடம், place அறிவகம், abode of knowledge. அன்பகம், abode of love,

அகம்பாவம் - செருக்கு, arrogance, ego. தான் என்னும் முனைப்பு. Arrogance is a negative quality

அகமகிழ்ச்சி - மனமகிழ்ச்சி, glee. ecstasy I am thrown into ecstasy.

அகமுடையாள்- மனைவி, wite, குடும்பத்திற்கு இன்றியமையாதவள். Vital for family life.

அகமுடையான் - கணவன், husband, குடும்பத்திற்கு இன்றியமையாதவன். Essential for family life.

அகரம் - 'அ' என்னும் முதல் எழுத்து. The first letter in Tamil. அனைத்து மொழிகளிலும் அகர ஒலி உண்டு. All languages have letters to represent the sound 'A'.

அகரமுதலி - அகராதி, dictionary. சொற்களை அகர வரிசையில் விளக்கும் நூல். A reference work explaining the words of a language in an alphabetical Ọrdes.

அகர வரிசை - சொற்களை அ வில்: தொடங்கி வரிசையாக அமைத்தல்.