பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகரவரிசைக் கோப்பு

12

அகவிலைப்படி


 Alphabetical order. We prepare index at the end of the book in the alphabetical order.

அகரவரிசைக் கோப்பு - கோப்புகளை அகரவரிசையில் அமைத்தல். alphabet filing. This is used in office.

அகராதி இயல்- அகராதி அமைப்பு பற்றிக் கூறுவது. Lexicography is the art of compiling dictionaries.

அகராதி இயலார் - அகராதித் தொகுப் பாசிரியர். Lexicographer, dictionary-maker.

அகராதி படித்தவன்- நன்கு படித்தவன், learned man, scholar.

அகராதி பிடித்தவன் - செருக்குள்ளவன், திமிர் பிடித்தவன், an arrogant man. He is an arrogant man.

அகல் - குழிவான விளக்கு, shallow lamp, சுட்ட மண் அல்லது உலோகத்தாலானது. Shallow lamp is either made of burnt mud or metal.

அகல் அலை வரிசை - ஒலி, ஒளி பரப்பில் பயன்படுவது, broadband, This is used in telecast.

அகல் அரங்கம் - வணிக வளாகத் திற்கு முன்னுள்ள விரிந்த இடம், esplanade. This is an area of open ground in front of a business complex. (e.g.) Esplanade, Chennai.

அகல இருப்பு வழி - இரு தண்டவாளங் களுக்கிடையே இடைவெளி அதிகமுள்ள இருப்பு பாதை. ஒ. குறுகிய இருப்பு வழி. broadgauge. This is the size of railway track wider than the metre gauge.

அகலக் கவி - ஒருவகைக் கவி, இக்கவி பாடுபவர். elaborate poetry, the poet one who writes this.

அகலம் - முப்பரிமாணங்களில் ஒன்று, breadth or width. Breadth is one of three dimensions,

அகவர், அகவலர் - பாடும் பாணர் bard, one who recites verses about kings and their deeds Shakespeare is called the Bard of AVOn.

அகவல் - ஆசிரியப்பா, A kind of Tamil metre,

அகவிதழ் - நிறமுள்ள பூவின் உள்வரிசை இதழ்கள். coloured petal. This is the inner leaf like structure. ஒ. புல்லி.

அகழாய்வு - மண்ணைத் தோண்டிச் செய்யும் ஆராய்ச்சி. Archaelogical excavation to find out old things.

அகழி - நீர் சூழ் அரண், அரண்மனை. moat, ditch, a sort of protection around a fort.

அகழெலி - வயல் எலி, field rat.

அகற்று - நீக்கு போக்கு remove. கோயிலுக்குள் போகுமுன் உன் மிதியடிகளை அகற்று. Remove your slippers before entering a temple.

அகன்ற - விரிந்த, பரவலான, broad, wide. Broad band satellite, broad river,

அகன்ற அறிவு - விரிந்த அறிவு, vast knowledge. அவர் அகன்ற அறிவுள்ளவர். He is a man of vast knowledge,

அகவிதழ் வட்டம் - மலரில் அல்லிகள் கொண்ட சுருள், corola. ஒ. புல்லி மலரில் வட்டம். This is the ring of petals covering a flower.

அக விலைப்படி- விலைவாசி உயர்வை ஈடுகட்ட ஊழியர்களுக்கு