பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகவு

13

அங்கதம்


அளிக்கப்படும் செலவுத் தொகை Dearness Allowance. (D.A.) . ஆக விலைப்படி மாறுதலுக்குட்பட்டது. Dearness allowance is subject to changes.

அகவு-கரை, கூவு, crow, caw. காகம் கரையும். The crow crows, மயில் அகவும். The peacock Caws.

அகவுயிர் - ஆன்மா, soul. உள்ளொளி, the inner light.

அகவுரை - கனியின் உள்ளுறை. endocarp. This is the inner layer of fruit.

அகவை - வயது, age, அவன் வயது பத்து. He is ten years of age.

அகழ்- தோண்டு ,dig out, excavate. மண்ணை தோண்டு. Dig the soil deep. குழி தோண்டு . Excavate a trench.

:அகழ்பொறி'- தோண்டும் எந்திரம், excavator. A machine used for digging.

அகழ்வார் - தோண்டுவார், digger, One who digs is a digger.

அகனைந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களுக்குரிய காதல் ஒழுக்கம். five aspects of love: union (hilly region), forbearance (forest-track), separation (waste land), sulking (fields), lamenting the lover's absence (sea and sea-shore).

அகாரணமாக - காரணமின்றி, without reason, அகாரணமாக அவன் மேல் ஐயம் கொள்ளாதே. Don't suspect him without reason.

அகாலம் - காலமல்லாக்காலம், being untimely, impropertime, அகாலத்தில் வந்திருக்கின்றாய். Your coming is rather untimely

அகால மரணம் - இளம்வயதில் இறத்தல். untimely death அவர் அகாலமரணம் இலக்கிய உலகில் வெற்றிடத்தை உண்டாக்கியுள்ளது. His untimely death has created a void in the World of literature,

அகிம்சை - வன்முறையில்லாமை, non-violence, நியாயமான கோரிக்கைகளைப் பெறக் காந்தியடிகள் அரசியலில் முதன்முதலில் பயன்படுத்திய முறை. The method adopted by Mahatma Gandhi for the first time in politics to achieve just demands.

அகில்- ஒரு வகை மரம், eagle Wood. பா. தேக்கு

அகிலம் - உலகம், world, பிரபஞ்சம் universe. All the World. What does all the world say?

அகைப்பு வண்ணம் - தமிழில் உள்ள சந்தங்களில் ஒன்று. One of the rhythms in Tamil.

அங்கணம் - முற்றம், courtyard. இப்பொழுது நாம் முற்றத்தில் உட்கார்ந்திருக் கிறோம். Weare now sitting in the courtyard.

அங்கணன் - சிவன், சிவபிரான். Lord Siva, the all knowing God.

அங்கண் - அங்கு, there, அங்குத் துளையில் ஒரு பாம்பு உள்ளது. There is a snake in the hole.

அங்கதம் - எள்ளி நகையாடல், satire. மடமை, நடத்தை, குருட்டுப் பழக்கம் ஆகியவற்றைக் கேலி செய்யும் இலக்கியம். This is the art of mocking people's foolish behaviour.