பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சுறுத்திப் பணம் பெறுதல்

17

அசுரன்


 அச்சுறுத்திப் பணம் பெறுதல் -மிரட்டிப் பணத்தைப் பறித்தல், black-maing. அச்சுறுத்திப் பணம் பெறுபவர். Black mailer.

அச்சுறுத்து - பயமுறுத்து, threaten. The robber threatened to kill me,

அசகாய சூரன் - அரிய செயல் செய்பவன், a man of sare deeds.

அசட்டுச் சிரிப்பு - முட்டாள் தன்மையுள்ள சிரிப்பு; stupid laughter

அசட்டை - புறக்கணிப்பு, neglect, discard. கடமை,அசட்டை neglect of duty.

அசட்டை செய் - புறக்கணி, negiect. உன் படிப்பை அசட்டை செய்யாதே Don't neglect your studies.

அசடன்- முட்டாள், stupid fellow

அசடு - முட்டாள்தன்மை, முட்டாள், stupid fellow.

அசத்து - அசரச் செய், astonish. அச்செய்தி என்னை அசத்தியது. The news astonished me.

அசதி- சோம்பல் tiredness, fatigue. அதிகவேலை அசதியை உண்டாக்கும். Too much work causes fatigue.

அசந்தர்ப்பம் - வாய்ப்பிலா நேரம், inconvenient time, நீ கூட்டத்தை கூட்டியிருப்பது அசந்தர்ப்பமானது. You have selected an inconvenient time for the meeting.

அசம்பாவிதம் - விரும்பத்தகாத நிகழ்ச்சி, untoward incident, happening, அக்கார் விபத்து ஓர் அசம்பாவிதம். That car accident is an untoward incident.

அசமந்தம் - சோம்பல், laziness, உன் அசமந்தத்தைக் கண்டி க்கிறேன். condemn your laziness.

அசரீரி - வானிலிருந்து கேட்கும் ஒலி, voice from heaven.நான் அசரீரி ஒன்று கேட்டேன். I heard a voice from heaven.

அசரை மீன் - ஆற்று மீன், river fish.

அசல் - மூலம், original, அசல் எங்கே ?Where is the original?

அசல் - முதல், principal. முதல் ரூபாய் 10,000, The principal is Rs 10000

அசாத்தியம் - இயலாதது, அரியது. impossible, rare. அரிய காரியங்கள் செய்வது அசாத்தியம். It is impossible to do rare things.

அசாதாரணம் - இயல்புக்கு அப்பாற்பட்டது extraordinary, great. கழகத்தின் அசாதாரணக் கூட்டம் நாளை நடைபெறும். An extraordinary meeting of the association will be held tomorrow.

அசிங்கம் - அருவருப்பு, filth, ugliness, இந்த அசிங்கத்தை எப்படி எழுதுகிறாய்? How do you write such filth?

அசிரத்தை - அக்கறையின்மை, lack of interest. கழகம் கலைய அசிரத்தையே காரணம். Lack of interest led to the dissolution of the association.

அசுத்த ஆவி - தீய ஆற்றல், evilspirit, satan. சாத்தான் ஓர் அசுத்த ஆவி, Satan is considered the Devil.

அசுத்தம்- அழுக்கு dirt, impurity உன் ஆடைகள் அழுக்காக உள்ளன். Your clothes are dirty.

அசுயை- பொறாமை, envy, jealousy. அசுயை ஒரு கெட்ட குணம். Envy is a bad quality.

அசுர- அளவுக்கு மீறிய, tremendous. அசுர வெடிப்பு. The explosion is tremendous.

அசுரன் - மிகுந்த ஆற்றல் உள்ளவன், giant. அவன் ஓர் அகரன். He is a man of indefatigable energy.