பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசுவமேத யாகம்

18

அஞ்சல் ஓட்டம்



அசுவமேத யாகம் - குதிரையைப் பலியிடும் வேள்வி, horse sacrifice. பழங்காலத்தில் அசுவமேதயாகம் செய்யப்பட்டது. Horse sacrifice was done in olden days.

அசுவராசியம் - ஊக்கம் இல்லாதது, lack of zeal, eagerness. அசுவராசியம் படிப்பைக் கெடுக்கும். Lack of zeal spoils studies.

அசுவினி - தாவரப்பேன், aphid.

அசேதனம் - தாது உப்புப் பொருள், inorganic substance. ஒ. சேதனம்.

அசை - தமிழ் யாப்பிலக்கணத்தில் எழுத்துக்களைச் சேர்த்துக் கணக் கிடப்படும் அடிப்படை அலகு. syllable. இது நேரிசை நிரையசை என இரு வகைப்படும். Arithmetic is a word of four sylables.

அசை - நகர்த்து, move, shake. Move the table a little.

அசைச்சீர் - சீரில் ஒரு வகை, foot, one metre syllable.

அசைச் சொல் - அசையாக வரும் சொல், expletive. Down is an expletive.

அசை போடு - மீண்டும் உணவை மெல்லு, chew the food, ruminate. I am simply vegetating at home.

அசை போடுவன - அசை போடும் பசு முதலியன, ruminants like cow. பசு ஒர் அசைபோடும் பிராணி. The cow is a ruminant,

அசையும் சொத்து - வண்டி முதலியவை, movable property. Car is a movable property.

அசையாச் சொத்து - வீடு முதலியவை, immovable property. House is an immovable property.

அசைவு - இயக்கம், motion, movement. அப்பொருள் இயக்கத்தில் உள்ளது. The object is in motion. தாவர இயக்கம், plant movement.

அசெளக்கியம் - நலமின்மை, indisposition. அசெளக்கியம் காரணமாக, நான் கூட்டத்திற்கு வர இயலவில்லை. I cannot attend the meeting because of indisposition.

அசெளகரியம் - இடையூறு, inconvenience, disadvantage. அசௌரியக திற்கு மன்னிக்கவும். Sorry for the inconvenience,

அஞ்சல் - கடிதம், letter. இதோ உங்களுக்கு ஒரு கடிதம். Here is a letter to you.

அஞ்சல் - மீண்டும் ஒலிபரப்பு செய்தல், relay, அது ஒரு சென்னை நிலைய அஞ்சல். It is relay from Chennai station, அதோ ஓர் அஞ்சல் ஓட்டம்,it is a relay race.

அஞ்சல் அட்டை- கடிதம் எழுத பயன்படும் அட்டை, post card.

அஞ்சல் அலுவலகம் - தபால் நிலையம், post office.

அஞ்சல் அலுவலர் - தபால் நிலைய த்தில் வேலை செய்பவர், post office worker.

அஞ்சல் ஆனை - பண உரிமை ஆணை, postal order.

அஞ்சல் உறை - கடிதம் வைத்து அனுப்பும் உறை, postal cover.

அஞ்சல் ஊழியர் - அஞ்சலகத்தில் வேலை செய்பவர், postal worker.

அஞ்சல் எழுத்தர் - அஞ்சலகத்தில் எழுத்து வேலை செய்பவர், postal clerk.

அஞ்சல் ஓட்டம் - தொடர் ஒட்டம், relay race.