பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அட்டமச்சனி

21

அடக்கவிலை



அட்டமச் சனி- எட்டாம் நிலைச் சனி. (சோதி), Saturn in the eighth house (Astro). இப்பொழுது, எனக்கு அட்டமச் சனி, Now I have Saturn in the eighth house.

அட்டமி - 1. எட்டாம் திதி (சோதி) eighth phase of the moon (Astro) 2, தீயநாள் , inauspicious day. பா. நவமி.

அட்டவணை - 1. செய்திகளை நிரல் படக்காட்டல், table. இந்நூலில் பயனுள்ள அட்டவணைகள் உள்ளன. This book contains useful tables. 2. பொருளடைவு, Index. இது நூலின் முக்கிய பகுதி, The index is an important part of the book.

அட்டவணை இனம் - கல்விச் சலுகை களுக்காக இந்திய அரசிய லமைப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல இனங்கள். The castes in the list of the Indian Constitution.

அட்டவனைப் பழங்குடியினர் - அரசு ஆணையிலிலுள்ள தொல்குடிகள். Scheduled tribes listed in Government orders.

அட்டாவதானம் - ஒரே சமயம் எட்டுச் செயல்களை கவனத்தில் வைத்து செய்தல். Art of attending to eight tasks at a time.

அட்டாவதானி - அட்டாவதானம் செய்யும் கலைஞன், Artist who performs attavadanam.

அட்டி- மறுப்பு, objection. நீ கூட்டத்திற்குச் செல்வதில் எனக்கு அட்டி இல்லை. I have no objection to your attending the meeting.

அட்டிகை, அட்டியல் - கழுத்தணி, necklace, இந்த அட்டிகை அழகாக உள்ளது. This necklace is beautiful.

அட்டில் சாலை - அடுப்பங்கரை, kitchen.

அட்டுப்பு- ஆவியாக்கிப் பெறப்படும் உப்பு. The salt obtained by evaporation.

அட்டூழியம் - அட்டகாசம், atrocity கொள்ளையர் அட்டகாசம் தாங்க முடியவில்லை. The atrocities of the robbers are unbearable.

அட்டை - 1. இரத்தம் குடிக்கும் புழுவினம், Leech. This is a blood sucker. 2. மேலுறை, wrapper, இந்த நூலுக்கு நேர்த்தியான மேலுறை உள்ளது. This book has a fine wrapper, 3. புதைமிதியின் அடி, sole of a shoe.

அட்டைத் தாள் - கெட்டியான அட்டை, cardboard. இந்த புத்தகத்தின் கட்டு கெட்டியான அட்டையாலானது, The binding of this book is done with card board.

அட்டைப் படம் - நூல் அல்லது இதழின் முகப்புப் படம், coverpage picture, மாத இதழ்கள் தவறாது முகப்புப் படம் கொண்டிருக்கும். The monthlies have cover page pictures invariably.

அடக்கம்- பணிவு, humility அடக்கம் அமரருள் உய்க்கும். Humility places a person among gods. (T.121) 2. திணிவு, compactness. The ice has compactness, 3. உற்பத்திச் செலவு, cost of production, இக்காலத்தில் உற்பத்திச் செலவு அதிகமே. Nowadays the cost of production is high, 4. கடித இணைப்பு, enclosure in the letter.

அடக்கவிலை - ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்குரிய செலவு, cost price. இது உற்பத்திச் செலவு