பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 அலை மோதும் போதே தலை முழுகு Strike while the iron is hot

அழுத பிள்ளை பால் குடிக்கும் Ask and it shall be given into you அழுதாலும் பிள்ளை அவள்தானே பெற வேண்டும் Every bird must hatch its own eggs அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் Too much of anything is good for nothing அறிவே பலம் Knowledge is power அன்று கிடைக்கும் பலாக்காயினும் இன்று கிடைக்கும் களாக்க்ாயே மேல். A bird in the hand is worth two in the bush - ஆசை வெட்கம் அறியாது Love is blind

ஆரோக்கியமே சிறந்த செல்வம் Health is wealth

ஆழம் தெரியாமல் காலை விடாதே Look before you leap இழந்துவிட்ட காலம் திரும்பி வராது Time once lost is lost for ever

உழைப்பின்றி ஊதியமில்லை No pains, no gains ஐயர் வருகிற வரைக்கும் அமாவாசை காத்திருக்குமா? Time and tide Wait for no man .

காற்றுள்ள போதே துற்றிக்கொள் Make hay while the sun shines கிழக்கோ மேற்கோ சொந்த வீடே சிறந்தது East or West, home is best குரைக்கிற நாய் கடிக்காது A barking dog seldom bites கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே Pride goes before a fall சிந்திய பால் பற்றிச் சிந்திப்பானேன்? No use crying over spilt milk