பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 83



மனோரை ஆட்கொள்ளுதல் பொருட்டுத் தன் பெருங் கருணையால் எளிவந்து மாயையின் வலியை நீக்கி ஆண்டு கொண்ட அருள் நலத்தினை அடியார் பலர்க்கும் ஆர்வமுடன் எடுத்துரைத்து "அம் முதல்வனுக்குச் சாத்துதற்குரிய நறு மலர்களைக் கொய்வோமாக" என அடியார் பலரையும் ஒருங்கு அழைத்தல் இப்பனுவலின் பொருளமைதியாகும். இதைத் தெளிவுறுத்தற்கு அயன் தக்கன், எச்சன் சந்திரன், அக்கினி, அருக்கன், இயமன், அவன் தூதன், இந்திரன், அரி (4, 15) முதலாயினோரும் பாண்டியனும் மயங்கியிருந்த நிலையை இறைவன் போக்கினான் என்ற புராண வரலாறுகளும்பெருந்துணைசெய்யும்."8 இந்த துட்பம் ‘'தேவரறியாத சிவம் தேடியே மாண்டநலம், ஆவலொடும் சொல்லி அடியாரொடும் கூடி, பூவியந்து கொய்தல் திருப்பூ வல்லியாம்' என வரும் திருவாசகவுண்மையால் இனிது தெளிவாகும். சிவபெருமான் வலிய வந்து ஆட்கொண்ட திறத்தை ஆவலோடும் சொல்லிக்கொண்டு அடியாரோடு கூடப் பூக்கொய்தல் பூவல்லியாம் என்று கூறும் திருப்பெருந்துறைப் புராணம்.

இப்பனுவலின் கண் தேனாடு கொன்றைச் சடைக் கணிந்த சிவபெருமான், ஊனாடி நாடி வந்துள்புகுந் தான் (5) எனவும், "இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே' துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்


8. தக்கன் தலையறுப்பட்டான். எச்சன் தலை மாற்றப்பட்டான். சந்திரன் உடல் தேய்வுற்றான். தீக் கடவுளின் நாவும் கையும், கொய்யப்பெற்றன, அருக்கன் பல்லுடைபட்டான். இராவணன் விரலால், மலைக்குக் கீழ் அழுத்தப் பெற்றான். அந்தகன் சூலத்துக்கு இரையாயினன், கூற்றுவன் உதையுண்டான். இந்திரன் வெட்டுண்டனன், அரி மார்பின்கண் நையப் புடைக்கப்பட்டான். அயன் குட்டுப்பட்டனன்.