பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச் செயல்கள் 85



  அத்தி யுரித்தது
     போர்த்தருளும் பெருந்துறையான் 
  பித்த வடிவுகொண்
     டிவ்வுலகில் பிள்ளையுமாம் 
  முத்தி முழுமுதல்
     உத்தரகோச மங்கைவள்ளல் 
  புத்தி புகுந்தவா
     பூவல்லி கொய்யாமோ (19) 

(அத்தி - யானை; பிள்ளையுமாம் என்றது விருத்த குமார பாலரான வரலாற்றைக் குறித்தது.)

என்பது இப்பனுவலின் பத்தொன்பதாம் பாடல். இதில், "இலங்கையில் அன்புடைய வண்டோதரியம்மைக்கு அநுக்கிரகம் செய்ய எழுந்தருளி, உபதேசம் செய்தபோது, அன்புடைய இராவணன் வர, சுவாமி பாலகனாய்த் திருமேனி கொள்ள, பார்ப்பதி தாய்போலக் குழந்தையை எடுத்துக் கொண்டு இடுப்பில் வைத்து அன்பால் இன்புற்று எழுந்தருளிய' செயலைக் குறித்ததெனப் பொருள் கொள்வர் சீகாழித் தாண்டவராயர்.

இப்பனுவலில் 19 திருப்பாடல்களே உள்ளன. சில பதிப்புகளில் மாவார வேறி' என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றிருப்பினும், பழைய பதிப்புகளில் இது காணப் பெறாததால் செருகு கவி' எனக் கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.

22. திருவுந்தியார் (14)

"உந்தி பறத்தல்" என்பது மகளிர் விளையாட்டுகளுள் ஒன்று. உந்தி பறத்தலாவது விளையாடும் பருவத்து இளமகளிர் பாட்டுடைத் தலைவனது


10. இது தில்லையில் அருளியதாகக் கடவுள் மாமுனிவர் கூறுவர்.