பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெருந்துறை அருளிச்செயல்கள் 89


 என்பது இதன் ஆறாம் பாடல். சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன் - தற்போதம் கெட்டுச் சிவபோதம் அடைந்த ஆன்மாக்கள் செய்த செயல்கள் எல்லாவற்றையும் தவமாக்கவின் இங்ங்ணம் கூறுகின்றார்.

  உரைமாண்ட வுள்ளொளி
     உத்தமன்வந் துளம்புகலும் 
  கரைமாண்ட காமப்
     பெருங்கடலைக் கடத்தலுமே 
  இரைமாண்ட இந்திரியப்
     பறவை இரிந்தோடத் 
  துரைமாண்ட வாயாடி
     தோனோக்கம் ஆடாமோ (14)
 (உரைமாண்ட - வாக்கின் எல்லையைக் கடந்த; கரைமாண்ட - எல்லையற்ற; இரைமாண்ட - புலனுணர்ச்சியாகிய உணவு அற்றுப்போக; இரிந்து - கெட்டு; துரை - இடம் (எதுகை நோக்கித் துறை துரையாயிற்று.) 

என்பது புதினான்காவது பாடல். இதில் உரையிறந்த இறைவனாகிய இறைவனை உள்ளத்தால் நினைந்த அளவில் காம வெகுளி மயக்கங்களாகிய நோய்கள் அறவே கெட்டொழிய ஐம்பொறிகளாகிய பறவைகள் வலிகுன்றியோட ஆன்மாவின் மிகுதிப் பாடாகிய பசுத்துவம் கெட்ட திறம் விரித்துரைக்கப் பெறுகின்றது.


24. திருப்பள்ளி எழுச்சி (20) :

12 பாண்டிய மன்னன் குதிரைகளை விரைவில் கொண்டு வரும்படி ஒலை அனுப்பிய போது அடிகள் வருந்தித் திருப்பெருந்துறையிலிருந்துகொண்டு பாடியது. இஃது இறைவனைப் பள்ளி எழுந்தருள வேண்டி


12. திருவாதவூரர் புராணமும் இப்பனுவல் திருப்பெருந் துறையில் அருளப் பெற்றதாகவே மொழியும்.