பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 மாணிக்கவாசகர்



பனுவல். இதில் இறைவனி-த்தி வாதவூரடிகள் கொண்ட பேரன்பின் முதிர்ச்சி தெளிவாகின்றது. இதன் பயனாக 'யான்’ எனது' என்ற இருவகைப் பற்றுகளும் அற்றுப் போனதைக் காணமுடிகின்றது. இப்பற்றுகள் நீங்க அடிகள் பால் நிகழ்ந்த வியக்கத்தக்க பல நற்செயல்களையும் இத் திருப்பாடல்கள் புலப்படுத்துவனவாக உள்ளன. இம்முறைவில் அமைந்த இத்தெய்வப்பனுவலுக்கு பக்தி வைராக்கிய விசித்திரம் என முன்னையோர் கருத்துரை வரைந்துள்ளனர். இக்கருத்தினை,

  சத்திய ஞானந்தரு தேசிகர் 
     மோகம் சதகமாம்.

என வரும் திருவாசக உண்மைத் தொடரும் வலியுறுத்தல் காணலாம்.

பக்தி என்பது ஆண்டவன்மீது அடியார்கள் கொண்ட அன்பு. வைராக்கியம் என்பது இறைவன்பால் செலுத்தும் பேரன்புக்குத் தடையாகவுள்ள உலகப்பற்றுகளையெல்லாம் அறவே வெறுத்தொதுக்கும் கடைப்பிடியாகிய மனஉறுதி. விசித்திரம் என்பது பற்றற்றான் பற்றிற்காக உலகப் பற்று களையெல்லாம் விடுதலாகிய வியக்கத்தக்க தன்மை. இச் செயல் சதுரப்பாடுடைய சிவஞானச் செல்வர்களாலன்றி பிறரால் மேற்கொள்ளுதற்கரிய பெருமையுடையதாதலின் வியக்கத்தக்க தன்மையுடையதாகின்றது. அருட்குரவனாக எழுந்தருளித் தம்மை ஆட்கொண்ட இறைவன்பால் அடிகள் கொண்ட பேரன்பின் உவப்பும் அத்தகைய பேரன்பிற்குத் தடையாய் நிகழும் உலகப்பொருள்களிடத்தே அவர் வைத்துள்ள உவர்ப்பும் ஒருங்கே புலப்படும் முறையில் அருளிப் செய்யப்பெற்றது பக்தி வைராக்கிய விசித்திரமாகிய இத்திருச்சதகம்; படிப்போர் மனத்தை ஈர்த்து அவர்கள் மனத்தைத் தூய்மையாக்கும் தெய்வத் திருப்பனுவல். ஏட்டுச் சுவடிகள் சிலவற்றில் காணப்படும் பத்து வகையாக