பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில்-திருச்சதகம் 97



இதற்கு அடுத்த பாடல்:

  கொள்ளேன் புரந்தரன் மாலயன் 
     வாழ்வு குடிகெடினும் 
  நள்ளேன் நினதடி யாரொடல் 
     லால்கர கம்புகினும் 
  எள்ளேன் திருவரு ளாலே
     விருக்கப் பெறின் இறைவா 
  உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் 
     லாதெங்கள் உத்தமனே (2) 

(புரந்தரன் - இந்திரன், நள்ளேன் - நட்புக்கொள்ளேன்; எள்ளேன் . இகழேன்)

என்பது. இதில், "ஈசா, நான் உன் திருவடிகளுக்குப் பாத்திரமானால் இந்திரன், திருமால், அயன் (அஜன்) முதலியவர்களின் பதவிகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன். என் குடிகெட்டாலும் உன் அன்பர்கள் அல்லாத மற்றவர்கள் நட்பை விரும்பேன். நரகம் புகுவதாயினும் அதை இகழ மாட்டேன். மேலோனே, உன்னையல்லாது மற்ற தெய்வங்களை நான் மதிக்க மாட்டேன்” என்கின்றார். இப்பாடல் அடிகளாரின் திட சித்தத்தை உணர்த்துகின்றது.

உள்ளேன் பிறதெய்வம் என்ற தொடர் "திருமாலை அல்லது தெய்வம் என்று ஏத்தேன்’ என்ற பொய்கை யாழ்வாரின் வாக்கை (முதல் திருவந். 64) நினைவுகூரச் செய்து திருமழிசையாழ்வார் குறிப்பிட்டும் "மறந்தும் புறந்தொழாமாந்தர்" (நான் திரு. 68) வகையைச் சார்கின்றார் அடிகள். 'மெய்ப்பொருள் ஒன்று; அது பல வடிவங் களில் இலங்குகின்றது. சாதனத்தின் தொடக்க நிலையில் இருப்பவர்கள் பல தெய்வங்கள் இருப்பதாகவே உணர் கின்றார்கள். அவற்றுள் தனது இட்ட மூர்த்தியினிடத்து

மா — 7