பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 மாணிக்கவாசகர்



அடிகளின் இக்கூற்றை சொற்பொருள் பண்ணி நாம் எடுத்துக் கொள்ளலாகாது. பொருள் ஆசை கொண்டவர்கட்கு எவ்வளவு பொருள் சேர்ந்தாலும் போதாது. அருள் நாட்டம் கொண்டவர்களுக்கு இறைவன் எவ்வளவு அருள் சுரந்தாலும் போதாது. ஆனால் பொருள் ஆசை மனிதனைப் பாழ்படுத்துகின்றது; அருள் ஆசையோ அவனை மேலும் மேலும் உயர்த்துகின்றது. ஈண்டுப் பரபக்தியின் உச்ச நிலையைக் காண்கின்றோம். இந்நிலையைச் சிந்திக்குமளவு இதில் ஊன்றியிருக்குமளவு, ஆன்ம சாதகன் உயர்நிலை அடைகின்றான். மனத்தில் மாறுபடுகின்ற இரண்டு ஆசைகள் ஒரே காலத்தில் தோன்றுவதில்லை. உலக ஆசைகள் நீங்க வேண்டும் என்று எதிர்மறையில் எண்ணுவதால் பயன் இல்லை. இறைநாட்டம் அதிகரிக்குமளவு உலக ஆசைகள் அகன்று போய் விடுகின்றன. இது வைராக்கியம் ஆகின்றது. நுகர்வானும் நுகர்பொருளும் வேறே இருந்துணரும் சுட்டறிவு இருத்தற்கு வருந்திக் கூறுகின்றார் இத்திருப் பாட்டில்.இங்ஙணமே ஏனைய பாடல்களிலும் பொருள் கண்டு அதுபவிக்க வேண்டும்.

4 ஆத்தும சுத்தி

ஆத்ம சுத்தி என்பதற்கு அநுபவத் தழுந்தல் என முன்னோர் கருத்துரைப்பர். சுட்டறுத்தலில் கூறியவாறு உண்மையுணர்ந்த ஆன்மா தூயதாய் அநுபவித்து அழுந்துகின்றதனை அறிவிப்பதால் இஃது ஆத்தும சுத்தியாகின்றது. ஆன்ம சுத்தியாவது, உயிர் பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறியப்படாத முதல்வனை அவனருளிய சிவஞானத்தாலே தன்னறிவின் கண்ணே நாடிக் கண்டு அம்முதல்வன் அருள்வழி அடங்கி நிற்றலால் மனமாக நீங்கித் தூய்மை பெறுதல். பதி ஞானத்தால் சிவபரம் பொருளைக் கண்ட காட்சி சலியாமைப் பொருட்டு நினைத்து அவனடிக்கு அன்புடையராய் ஆடுதல், என்புருகிப் பாடுதல், பாதமலர்