106 மாணிக்கவாசகர்
செய்வதறியாச் சிறுநாயேன் செம்பொற் பாத மலர்காணாய் பொய்யர் பெறும்பே ரத்தனையும் பெறுதற் குரியேன் பொய்யில்லா மெய்யர் வெறியார் மலர்ப்பாதம் மேவக் கண்டும் கேட்டிருந்தும் பொய்ய னேனான் உண்டுடுத்திங் கிரிப்பு தானேன் போரேறே (2) (வெறி - மணம்)
என்பது இரண்டாவது பாடல். "அஞ்ஞான இருளை அறவே அகற்றும் போர் வீரனாகிய இறைவா! அப்பெரிய செயலை அறிந்து கொள்ளாத அறிவிலி நான், ஞான சொரூபியாகிய உன்னை வணங்காது, அநித்தியமாகிய உடலைப் பேணி அதினின்று வருகின்ற அற்பசுகத்தை நாடும் நாய் போன்றவன் நான். பொய்யாகிய உடற்பற்றை ஒழித்துவிட்டு மெய்ப் பொருளாகிய உன்னையே சேவிக்கும் சான்றோர்களைப் பார்த்திருந்தும் அவர்களைப்பற்றிக் கேட்டிருந்தும், அவர்களது செந்நெறி சாராது உடலை ஒம்புதலிலேயே நான் கண்ணும் கருத்துமாயிருக்கின்றேன். என்னே என் இழி செயல்" என்பதில் அடிகள் தம்பிழைகளை நினைந்து வேசறுகின்றார். ஏனைய பாடல்களிலும் இவ்வாறே தம்பிழைகளை நினைந்து வேசறுகின்றார். ஆகவே, அகங்கரைந்துருக வெளிவந்த இத்திருப்பதிகம் "அநுபோக சுத்தி" என்ற தலைப்புக்கு ஏற்புடையதாகின்றது. தேனைப் பாலைக் கன்னலின் தெளிவையொளியைத் தெளிந்தார்தம் ஊனையுருக்கும் உடையானை உள்கி உள்ள முருகும் பெருங் காதலாகிய சுகமேலீட்டுக்கும் சிறந்த இலக்கியமாகின்றது.
7 காருணியத்திரங்கல்
காருண்யமாவது, இறைவன் உயிர்கள்பால் வைத்த பெருங்கருணைத் திறம். காருணியம் .