பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110 மாணிக்கவாசகர்



சிவானந்தபோதம் என்பது அதுவே, அதில் அழுந்தியிருத்தல் வாழ்க்கையின் குறிக்கோள் ஆகும்’ என்பது. 6

இப்பதிகத்தின் முதற் பாடல்:

  புணர்ப்பு தொக்க வெந்த என்னை
     யாண்டு பூண நோக்கினாய்
  புணர்ப்பதன்றி தென்றபோது
     நின்னொ டென்னொ டென்னிதாம்
  புணர்ப்ப தாக வன்றி தாக
     வன்பு நின்கழற்கனே
  புணர்ப்பு தாக வங்க ணாள
     'புங்க மாண போகமே (1)

(புணர்ப்பது சேர்த்துக் கொள்வது; புங்கம் - உயர்வு)

என்பது, தம்மை ஆண்டுகொண்டருளிய இறைவனை நோக்கி, "எந்தையே,என்னை ஆட்கொள்ளுதலில் நீ காட்டிய காருண்யம் என்னை உன்னில் இரண்டற ஏற்றுக் கொள்வாய் போல் தென்பட்டது. ஆனால் இவ்வுடல் வாழ்க்கையிலேயே இன்னும் சிறிது காலம் இருக்க என்னை நீ விட்டுவைத்திருக்கின்றாய். நானோ உன்மீது வைத்துள்ள பேரன்பால் உடல் வாழ்க்கையை உள்ளத்தில் வாங்கிக் கொள்ளாது சிவானந்த போதத்திலேயே திளைத்திருபேன்' என்று முறையிடுகின்றார்.

இறைவன் திருவடிக்கண் செலுத்தும் அன்பொன்றே இந்திரன் முதலியோர் பதவிகளை யெல்லாம் கீழ்ப்படுத்தி எல்லா இன்பங்கட்கும் மேலானதாகிய பேராவியற்கையாகிய பேரின்ப நிலையை நல்கவல்லது என்பதனை,


6. சித்பவாநந்தர் - திருவாசகம் - பக் 352-53