பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருப்பெருந்துறையில்-திருச்சதகம் 111



  போகம் வேண்டி வேண்டிலேன் 
     புரந்தரன் ஆதி இன்பமும் 
  ஏக நின்கழல் இணை அலாது
     இலேன் என் எம்பிரான் (2) 

என்ற திருப்பாடல் பகுதியில் தெளிவாகக் குறிப்பிடுவர்.

(9) ஆனந்த பரவசம்

மேற்பதிகத்தில் குறித்தவண்ணம் ஆனந்த வெள்ளத்து அழுந்தியிருக்கின்றபோது ஆனந்தத்தை நுகர்கின்றோம் என்ற அறிவு அற்றுப் போகப் பரவசம் அடைதல். அதாவது, பேரின்பத்தில் தலைப்படக் கிடந்த நல்லுயிர் மேன்மேலும் உலப்பிலா ஆனந்தமாகிய அதன் கண் ஈடுபட்டுத் தன்வசம் அழிதல் ஆனந்த பரவசம் ஆகும். பரவசம் என்பதற்குப் பிறர்வயப்படல் என்பது பொருள். ஆயினும், ஈண்டு அச்சொல் தன்வசம் அழிதல் என்ற கருத்தில் ஆளப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடுவர் பண்டிதமணி. உயிர் தன்வயம் இழந்து பேரின்பவயப்பட்டு அறிவிழந்து இறவா இன்பம் நுகர்ந்து கொண்டிருப்பதைக் குறிப்பது இத்திருப்பதிகம். இந்த நிலையை,

  தூங்காமல் தூங்கிச்
     சுகப்பெருமான் நின்னிறைவில் 
  நீங்காமல் நிற்கும்  
     நிலைபெறவும் காண்பேனோ” 

என்றும்,

  சிந்தனைபோய் நானெனல்போய்த் 
     தேக்கஇன்ப மாமழையை 
  வந்து பொழிந்தனைநீ 
     வாழி பராபரமே 

எனவும் வரும் தாயுமானவரின் திருமொழியிலும் கண்டு மகிழலாம். சுருக்கமாக உரைத்தால், சீவபோதம் முற்றும்


7. திருவா. திருச் சதகம் - கதிர் மணி விளக்கம் பக்-371

8. காண்பே. 10; 9. பராபரம் . 137