பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை (டாக்டர் பொன். செளரிராசன் பேராசிரியர்-துறைத் தலைவர், திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி) கவிதை ஓட்டத்தைக் களிற்று நடை, பரிநடை (கஜகதி, துரக கதி) என்றெல்லாம் குறிப்பிட்டு வாய்விட்டுப் படித்து மனக்கண்ணில் கண்டு சுவைஞர்கள் மகிழ்வர். 'ஆடு கொடிப் படை சாடி அறத் தவரே ஆள’ என்னும் கம்பர்தம் பாடல் பரிநடையில் (துரக கதியில்) அமைந்துள்ளது என்று குறிப்பிட்டு அதற்கேற்ப மொழிநடையில் பாடி இன்புறுவர். இவ்வாறு ஒலி நயத்திற்குக் கவிதை உகந்த இந்தக் களிற்றுநடை, பரிநடை முதலியன உரைநடையில் இன்னொரு வகையில் அமைந்து அழகு செய்வதைக் காண்லாம். பூனைக்கு ஒரு பொந்து போதும்; பூனை நடை பதுங்கு நடை. யானைக்குப் பெரிய தோப்பு வேண்டும். அது நடை யில் நிறைவும் பெருமிதமும் கொண்டு விளங்கும். அப்படித் தான் பேராசிரியர் டாக்டர். க. சுப்புரெட்டியார் அவர்களது கடை எப்பொழுதுமே கோலஞ்செய் துங்கக் களிற்றின்’ நடையாக அமைதலைக் காணலாம். மாணிக்கவாசகர் நூலின் தொடக்கமும் வளர்ச்சியும் இப்படித்தான் பெருமிதத்தோடும் மிகுந்த அநுபவத் துடனும் அமைந்து விளங்குவதைக் காணலாம். 'மதுரையின் புகழுக்குத் தமிழ்ச்சங்கமும், மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலும்தான் முதற்காரணம் என்பதை நாம் அறிவோம். மீனாட்சி கோயிலின் மிகப் பெரிய வானளாவ நிற்கும் ஒன்பது கோபுரங்களும், அவற்றின்மீது புராணக் கதைகளையெல்லாம் விளக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/13&oldid=863998" இலிருந்து மீள்விக்கப்பட்டது