பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112 மாணிக்கவாசகர்



ஒடுங்கி சிவபோதம் எஞ்சி யிருக்கும்போது உயிர்அடையும் நிலையே ஆனந்த் பரவசமாகின்றது. இந்தப் பதிகத்தில் இரண்டு திருப்பாசுரங்களில் ஆழங் கால் பாடுவோம்.

  விச்சுக் கேடுபொய்க் காகா
     தென்றிங் கெனைவைத்தாய் 
  இச்சைக் கானா ரெல்லாரும் 
     வந்துன் தாள்சேர்ந்தார் 
  அச்சத்தாலே யாழ்ந்திடு 
     கின்றேன் ஆரூரெம் 
  பிச்சைத் தேவா என்னான்
     செய்கேன் பேசாயே(1) 

(விச்சுக் கேடு - விதையின் அழிவு: இசைக் கானார் . கருணைக்கிலக்கானார்)

என்பது முதற் பாடல். இதில் அடிகள்: "திருவாரூரில் கோயில் கொண்டருளிய பிச்சைத் தேவனான பெருமானே, இவ்வுலகில் பொய்யாகிய பயிருக்கு விதையில்லாமல் போகக் கூடாது என்னும் கருத்துடன் பொய்க்குரிய விதையாக என்னை இங்கே சேமித்து வைத்துள்ளாய். நின்பால் ஆராவிருப்புடையாரெல்லாகும் நின் திருவடியை அடைந்து இன்புறுகின்றனர். யானோ நின் அருள் வெள்ளத்தில் அகப் பட்டும் அதனை நுகர்ந்து இன்புறும் உணர்வின்றி எனது அறி யாமையிலுளதாகிய அச்சம் காரணமாகத் துன்பத்துள் ஆழ்ந்து போகின்றேன். ஆற்றலற்ற யான் வேறு என் செய்ய வல்லேன்? நின் அருளாரின்பத்தை நுகர்தற்குரிய வழியை எளியேனுக்கு உரைத்தருள்வாயாக" என்று இறைவனிடம் வேண்டுகின்றார். இதன்கண் அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன். நான் என் செய்கேன்’ என்ற பகுதி அடிகளது பரவச நிலையைப் புலப்படுத்துவதாகும். மெய்யடியார்கள் எல்லோரும் நின் திருவடியைச் சார்ந்து பேரா இன்பத்தில்