பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 மாணிக்கவாசகர்



நம்மாழ்வாரின் திருவிருத்தத்திலும் இந்தப் பழமொழி அற்புதமாக அமைந்துள்ளது.

  மைப்படி மேனியும் செந்தாமரைக்
     கண்ணும வைதிகரே 
  மெய்ப்படியாலுன் திருவடி
     குழுந் தகைமையினார் 
  எப்படி யூராமிலைக்கக் குருட்டா
     மிலைக்கும் என்னும் 
  அப்படி யானும் சொன்னேன்
     அடியேன்மற் றுயாதென்பனே?
                               - திருவிருத்-94 

(மை - நீலநிறம், மெய்ப்படி உண்மையான நெறி; தகைமை - தன்மை; மிலைக்க கனைக்க: மற்றுயாது - வேறு என்ன)

இதில் ஆழ்வார் நாயகி (பராங்குச நாயகி) 'கண்டார் கண் குளிரும்படியான உனது திருமேனியையும் சிவந்த தாமரை மலர்போன்று இருக்கும் திருக்கண்களையும் உடையவனான உன்னுடைய திருவடித் தாமரைகளை மெய்யாகக் கண்டு தலைமேற் கொண்டு அநுபவிக்கும் தன்மை யுடையவர்கள் வேதவேதாந்த ஞானத்திற் சிறந்த மகான்களேயாவர்; அறிவிலியான நானும் அவர்களைப்போல் ஏதோ சொல்லு இன்றேன். இஃது என்போலுமெனில் நன்றாய்க் கண்தெரிந்த பசுக்கள் (மேய்ச்சல் காட்டினின்று) ஊர்புகுந்து சேர்ந்ததும் மகிழ்வுற்று அந்த மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகக் கனைக்கின்றன கண்ணில்லாத குருட்டுப்பசுவும் அது கேட்டு அதனை இன்னதென்றறியாமல் ஒக்கக் கனைக்கும் என்று உலகம் சொல்லும். வேதவிற்பன்னர்கள் சொன்ன பாசுரத்தைக் கேட்ட ஞானத்தாலே சொல்லுகின்றேனேயன்றி என் ஞானத்தால் கண்டு என் ஆற்றலால் சொல்லவில்லை’ என்கின்றாள்.