பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 மாணிக்கவாசகர்



உயிர் தோய்தல் ஆனந்தத்தி அழுந்தலாகும், இத்தோய்வு முதிர முதிரத் தன்வயம் அழிதல் என்னும் ஆனந்த பரவசம் உண்டாகும். தன்வயம் அழிந்த நிலையின் மேம்பட்ட நிலையே "அப்பால் நிலை' எனப்படும் அதீத நிலையாகும். இந்த நிலையில் காண்பான், காட்சி காணப்படும் பொருள் என்னும் வேறுபாடு இல்லை. தன்வயம் அழிந்த நிலையிலும் ஒரோவழிப் பண்டைத் தொடர்பால் பேரின்பம் நுகர்கின்றோம் என்னும் எண்ணம் தோன்றுதல் கூடும். அப்பால் நிலையில் அதற்கு இடம் இல்லை. ஆண்டு மேலாம் சிவன்மை விளக்கம் அப்பால் நிலையில், மேலாகும் இன்பநிலை மேவும். இந்த இன்ப நிலைக்கண் நுகரும் ஆருயிர்க்குத் தன்னைக் குறித்து யான் எனலும், நுகர்வுப் பொருளாகிய இறைவனைக் குறித்து நீ நினது என்றலும் ஆகிய வேற்றுமை உணர்ச்சி சிறிதும் நிகழாது.

  எனைகாணென்ப தரியேன்பகல்
     இரவாவதும் அறியேன் -  உயிருண்ணி - 3 

என வரும் அடிகளது அநுபவமொழி இதனைத்தெளிவாக்கும்

  அப்ப னேயெனக் கமுத னேஆ
     னந்த ளேயகம் நெகஅள்ளுறுதேன் 
  ஒப்ப னேஉனக் குரிய அன்பரில்
     உரிய னாயுனைப் பருக நின்றதோர் 
  துப்பனேசுட்ர் முடியனேதுணை
     யாள னேதொழும் பாவ ரெய்ப்பினில் 
  வைப்ப னேயெனை வைப்பு தோசொலாய்
     கைய வையகத் தெங்கள் மன்னனே (8)

(துப்பன் - உணவாயுள்ளவன்; தொழும்பாளர்-அடியார்: எய்ப்பினில் வைப்பு - இளைத்த காலத்தில் உதவும் சேமநிதி நைய வருந்தும்படி)

என்பது எட்டாவது பாடல், இஃது அடிகள் பெற்ற ஆனந்தாத நிலையினைக் குறித்தல் அறியத்தக்கதாகும்.