பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் நிகழ்ச்சிகள் 119



இறைவன் மானிடத்திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து என்னை ஆட்கொண்ட அன்றே எனது பிறப்பு ஒழிந்தது . மன்னனுக்குத் தவறு விளைத்தலாகாது என்ற எண்ணத்தினால்தான் இவன் போந்தேன். அரசனுடைய கடன் முழு வதையும் விரைவில் தீர்ப்பேன். உங்கள் வழியில் நீங்கள் செல்லலாம் எனக் கூறி அவர்களை அனுப்புகின்றார். அவர்களும் மனம் நொந்து அவரைவிட்டு அகல்கின்றனர்.

அடுத்தநாள் பாண்டியன் அனுப்பிய ஏவலாளர் சிலர் அடிகளிடம் வந்து குதிரைகள் வந்தனவோ! என வினவு கின்றனர். அதுகேட்ட அடிகள் குதிரைகள் மெய்யாகவே இப்பொழுது வந்துவிடும். நீங்கள் அவசரப்படுதல் வேண்டா நகரை அணிசெய்து வைக்கும்படி சொல்லுமின். என்சொல் தப்பாது என்று சொல்லியனுப்புகின்றார். அடிகள் குறித்த காலம் வந்தும் குதிரைகள் வரவில்லை. அரசன் சினமுறுகின்றான். முறை செய்வோரை அனுப்பிக் கேட்கச் செய்கின்றான். அடிகள் முன்போலவே மறுமொழி சொல்வி அவர்களை அனுப்பி விடுகின்றார். இந்நிலையில் அமைச்சர் பலரும் ஒன்று கூடி அரசனை அணுகி, "மன்னர் பெருமானே, வாதவூரன் பெரும்பித்தனாகி விட்டான். அவன் சொல்லை நம்பி நகரை அணி செய்வித்தனை: பித்தன் பெருந்துறையில் நமது பொருள் முழுவதையும் மனம்போனபடி வாரி இறைத்து விட்டான். இரக்கமின்றி அவனை ஒறுத்து அவனிடமிருந்து பொருளைப் பெற முயல்வதே இனிச் செய்யத்தக்கது" என்று அறிவுரை கூறித் தெளிவிக்கின்றனர்.

அமைச்சர் சொற்கேட்ட அரசன் தனது தெளிவின்மையால் நேர்ந்த பொருள் இழப்பினை எண்ணுகின்றான். பெரு மூச்சு விட்டுப் பொருமுகின்றான். கண்களில் நெருப்புப் பொறி பறக்கச் சினம் கொள்ளுகின்றான். மையல் நெஞ்சினனாகிய வாதவூரரை வளைத்துப் பிடிமின் எனப் பிரம்படிக்காரரை ஏவுகின்றான். அவர்களும் அரசன்