பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் நிகழ்ச்சிகள் 123



இறைவனைக் கைகூப்பி வணங்கித் தொழுது போற்றுகின்றனர். பாண்டியன் அமைச்சர்கனை நோக்கிக் குதிரைச் சாத்தின் தலைவராகிய இவர் நம் சொக்கநாதர்போல் காணப்படுகின்றனர். இவர் கொணர்ந்த குதிரைகளை நோக்குங்கள். காலம் தாழ்ந்துவிட்ட போதிலும் இவற்றை நல்லனவாகத் தேர்ந்து வாங்கின வாதவூரரைக் காணுங்கள்’ எனப் பலமுறை வியந்துரைக்கின்றான்.

குதிரைப் பாகனாகிய இறைவன் அரசன்முன் வந்து "அரசரே, உம் அமைச்சராகிய வாதவூரர் தந்த பொருளனைத்தையும் குதிரைகள் தருவதாக வாக்களித்து எம்மவர்கள் பெற்றனர். இக்குதிரைகள் யாவும் பல தீவுகலிருந்தும் இமயமலைக்கு அப்பாலிருந்தும் பெருந்துறையில் வந்து இறங்கியவை. உடற்பழுதின்றி நற்சுழிகள், நன்னிறங்கள் முதலியன வாய்ந்த உயர்சாதிக் குதிரைகள் இவை. அறிஞர் முன்னே இவற்றின் நல்லியல்புகளை ஆராய்ந்து கண்டு இக்குதிரைகளைக் கைகொள்வாயாக. இவை நின்னுடையனவாக ஆன பின்னர் இவற்றின் நன்மை தீமைகள் எம்மைச் சார்ந்தனவாகா எனக் கூறி ஆவணி மூல நன்னாளில் குதிரைகளைக் கயிறு மாறிக் கொடுத்தருளுகின்றார். பாண்டியனும் பரிபாகன் சொல்லியவற்றுக்கெல்லாம் முழுதும் உடன்பட்டுக் குதிரைகளை ஏற்கின்றான். பரித்துறைக் காவலர்களிடம் அவற்றைக் ஒப்புவித்து இவற்றைப் பந்தியிற் சேர்க்குமாறு கட்டளை யிடுகின்றான். அவர்களும் அவற்றை நடத்திச் சென்று பந்தியிற் சேர்க்கின்றனர். இந்த வரலாறு நம்பி திருவிளையாடலில் கண்டது.

பரஞ்சோதி முனிவரும் இந்த வரலாற்றை கிட்டத்தட்ட இம்மாதிரியே கூறுகின்றார்.பரிப்பாகனாக வந்தவர் அரசரை நோக்கிக் குதிரைகளின் கதிகளைக் காணுமாறு கேட்டதைப் பரஞ்சோதியார்,