பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124 மாணிக்கவாசகர்



  அண்டமெலா மாதார மாகத் தாங்கும்
     ஆனந்தத் தனிச்சோதி அண்டம் தாங்கும்,
  சண்டமறைப் பரிதனக்கா தார மாகித்
     தரிக்கவொரு காலத்தும் அசைவிலாத
  புண்டரிகத் தாளசையப் பாச நீக்கும்
     புனைகரத்தாற் பரிபூண்ட பாசம் பற்றிக்
  கொண்டரச னெதிர்போந்து மன்னா எங்கள்
     குதிரையேற் றஞ்சிறிது காண்டி என்றார்

(மறைப்பரி - வேதப் புரவி; புண்டரிகம் - தாமரை,பாசம் - கயிறு)

என்ற பாடலால் காட்டுவர். பின்னர் குதிரையின் வகைகளை விளக்கத் தொடங்கிய பரிப்பாகனார்,

  காயும்வேல் மன்ன ஓர் இக்
     கடும்பரி அமையம் வந்தால் 
  ஞாயிலும் தாண்டிச் செல்லும்
     காட்டமும் நுழையாச் சால 
  வாயிலும் நுழையும் கண்ட
  வெளியெலாம் வழியாச் செல்லும் 
     தீயவெம் பசிவந் துற்றுால்
  தின்னாத எனினும் தின்னும். 

(ஞாயில் - மதில் உறுப்பு: நாட்டம் - பார்வை; சாலம் - பல கணி)

என்று தொடங்கி எட்டு வயதினை எட்டாத பாடலம் (88) கோடகம் (89), இவுளி (90), வன்னி (91), குதிரை (92) பரி (93), கந்துகம் (94) என்ற குதிரை வகைகளையெல்லாம் குதிரை இலக்கணம் தவறாது விளக்கும் பரஞ்சோதியாரின்


5. நரிபரியாக்கிய-76

6. க்ஷ - 85