பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 மாணிக்கவாசகர்


 மரியாதைக் குறைவு என்று பாண்டியன் சினங்கொள்ள, அருகிலிருந்த அடிகள் இஃது அவர் நாட்டு வழக்கம்’ என்று அமைதி கூறி அரசன் சினத்தைத் தணிவிக்கின்றார். மன்னன் அத்தலைவனோடு வந்த ஏனைய வீரர்கட்கும் உயந்த ஆடைகளைப் பரிசாக வழங்க, வீரர்கள் அவற்றை வாங்கித் தத்தம் தலைமிசைத் தரித்துக் கொள்ளுகின்றனர். பரிசேவகனாய் வந்த இறைவன் பாண்டிய மன்னன் பால் விடைபெற்றுப் புறப்படும் பொழுது வாதவூரடிகள் அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு பிடித்தபத்து என்ற பனுவலைப் பாடிப் போற்றுகின்றார் 11. இறைவன் அடிகளை நோக்கி "நேசம் மிக்க முனிவரே, நும் கருத்தை இங்கு வந்து முடித்தோம். பாதத்தைவிடுக’ என்று சொல்லிப் புறப்பட்டுப் போகின்றார். அன்று குதிரையேற்றம் கண்டவர்கள் யாவரும் இத்தகையதொரு அற்புதக் காட்சியை என்றும் கண்டதில்லை எனக் கூறிப் பேரானந்தக் கடலில் திளைக்கின்றனர். பாண்டின் வாதவூரருக்குப் பொற்பட்டம் முதலிய வரிசைகளை நல்கி அவர்தம் மாளிகைக்குச் செல்லுமாறு விடைகொடுக்கின்றான்; பின்னர்த் தன் அரண்மனையை அடைகின்றான். குதிரைச் சாத்தின் தலைவனும் உடன் வந்த ஏனைய குதிரை வீரர்களும் மறைந்து திருஆலவாய்த் திருக்கோயிலை வந்தடைகின்றனர்.

குதிரைச் சேவகனாக வந்து தோன்றிய எளிமைத் திறம் அடிகளின் திருப்பாடல்களில் அகச்சான்றுகளாக அமைந் துள்ளன.

  மதுரைப் பெருககர் மாநகரிருந்து 
  குதிரைச் சேவக னாகிய கொள்கையும்
                                -கீர்த்தித்திரு 44.45 

11. இது தோணிபுரத்தில் (சீர்காழியில்) அருளிச் செய்யப் பெற்றதாகத் திருவாதவூரர்புராணம் கூறும்.