பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 மாணிக்கவாசகர்


 என்றும், நரிகளைப் பரிகளாக்கிய செய்தி,

  நரியைக் குதிரை யாக்கிய நன்மையும்
                                   -க்ஷ -36
  ...நரிகளெல்லாம் பெருங்குதிரை யாக்கியவா 
     றன்றேயுன் பேரருளே
                                  -திருவேசறவு

என்றும் குறிப்பிடப் பெற்றிருப்பதைக் காணலாம். இன்னும்,

  வெள்ளைக் கலிங்கத்தர்
     வெண்டிரு முண்டத்தர் 
  பள்ளிக்குப் பாயத்தர்
     அன்னே யென்னும் 
  பள்ளிக்குப் பாயத்தர்
     பாய்பரிமேல் கொண்டென் 
  உள்ளங் கவர்வரால்
     அன்னே யென்னும்
         -அன்னைப் பத்து.7.

என்று வருவதும் காண்க.

புதியனவாக வந்த குதிரைகளைப் பந்திகளில் நிரல்படக் கட்டி அவற்றுக்குக் கருப்புக் கட்டியொடு கலந்த கொள்ளு, பயறு, துவரை முதலிய இனிய உணவுகளைக் கொடுத்தும் அவை அவற்றை உண்ணவில்லை. மாயக் குதிரைகளாகிய அவை அன்று நள்ளிரவில் ஒன்றையொன்று முகம் பார்த்து "நாம் நேற்று நன்றாக அடிபட்டோம்; கழுத்திலும் காலிலும் கயிற்றால் கட்டுண்டோம். இனி இங்கிருப்பின் குருதி நீரொழுகப் புண்படுவோம். நமக்கு வேண்டாத உணவும் படைக்கப்பெறும். விடியும்முன் நம் பழைய உருவத்தைக் கொண்டு இவ்விடத்தை விட்டு நழுவி விடவேண்டும்.’’ என்று கூறிக் கழுத்திற் கட்டிய கயிற்றைக் கடித்தெறிந்து நரிகளா