பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் நிகழ்ச்சிகள் 129



  அரிய பொருளே அவிநாசி 12
     யப்பா பாண்டி வெள்ளமே 
  தெரிய வரிய பரஞ்சோதீ
     செய்வ தொன்றும் அறியேனே.
                        -ஆன, மாலை-7 

(குதிரைப்பரி - குதிரை பூர்தி, பிச்சது ஏற்றும் -திகைக்கச் செய்யும்)

என்ற பாடலில் குறிப்பிடுவர் அடிகள். இறைவன் கொணர்ந்த பரிகள் நரிகளாய் மாறிய பின்பே அவை முன்னை நிலையில் நரிகளாயிருந்தன என்ற உண்மை புலப்படுமாயினும், பெருந்துறைப் பெம்மான் நரியைப் பரியாக்கிய அளவில் அமையாது பரிகளை மீண்டும் நரிகளாக மாற்றி மதுரை மக்களை மதி மயங்கச் செய்தனன் என்ற கருத் தமைய நரியைப்...... பெருந்துறையாய்’ என அடிகள் இறைவனை நெஞ்சம் நெக்குருகிப் போற்றுதலானும் குதிரைச் சேவகனாகிய இறைவனால் மதுரை நகரத்தே கொண்டு வந்து சேர்க்கப் பெற்ற பரிகள் மீண்டும் நரிகளாய் மாறிய நிலை நன்கு உணரப்பெறுகின்றது.

வழக்கம்போல் வாதவூரடிகள் நாட்கடன்களை முடித்துக் கொண்டு முகமலர்ச்சியுடன் பாண்டியனின்


12. அவிநாசி திருப்பூரிலிருந்து 8 கல் தொலைவு, பேருந்து வழி. சுவாமியின் பெயர் தலத்திற்கும் பெயராயிற்று. (திருவிட எந்தை என்ற இறைவன் பெயர் திருவிட எந்தை என்ற தலத்திற்கும் பெயராயினது போல-108 திவ்விய தேசங்களில் ஒன்று).முதலையுண்ட பாலனை உயிர்ப்பித்துக் கொடுத்த அற்புதம் நிகழ்ந்த தலம்; முதலை இருந்த மடு இப்போது "தாமரைக் குளம்" எனப்படுகின்றது. சிறுவன் முதலை வாயினுட்புக்கு ஒளிந்த ஊர் புக்கொளியூர்.திருப்புக்கொளியூர் அவினாசி என்பது தலப் பெயர். மா-9