பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii மனத்தைக் கவர்கின்றது. இச்சிலை மனித முகமும், சிங்க உடலும் கொண்டது. இதன் சிற்ப அழகே கண்ணைக் கவரும் பான்மையது. இது புருஷா மிருகம்’ என்ற பெயரால் வழங்குகின்றது. இஃது ஏரி நீரைத் தூய்மையாக்கும் தெய்வம் என்றும், ஊரைக் காக்கும் தெய்வம் என்றும், இதனால் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று ஒரு திருவிழா நடை பெறுகின்றது என்றும் சிலர் மூலம் கேள்விப்படுகின்றேன். இதன் அருகிலுள்ள பிடாரிக் கோயில் ஊர்ப் பெரு மக்களுக்குப் பத்தியின் இருப்பிடமாகத் திகழ்கின்றது. இத் திருக்கோயிலின் நித்திய கருமங்களில் ஏதேனும் ஒன்று எக் காரணத்தினால் தவறிவிட்டாலும் ஏரி வறண்டு மழை குன்றி வேளாண்மைக்குக் குந்தகமாய் விடும் என்று இன்றும் மக்கள் நம்புகின்றனர்,” என்பதில் இவற்றைக் காணலாம். பேராசிரியர் சுப் புரெட்டியார் பிறவியிலேயே ஓர் ஆராய்ச்சி யாளர். எந்தச் செய்தியையும் மேல்மட்டமாகக் கூறி யாரும் அவரிடமிருந்து தப்பமுடியாது. என்ன அது, எப்படியாயிற்று அது, எதற்கு ஆயிற்று அது, யாரால் ஆயிற்று அது, அதனால் விளையும் நன்மை தீமை என்ன என்று இப்படியெல்லாம் துருவித் துருவிக் கேட்பது அவரது இயல்பு. தாம் காணுகின்ற காட்சிகளையும், கற்கின்ற நூல்களையும் அவ்வாறு ஆய்ந்து, ஆய்ந்து உண்மை கண்டு அறிவுறுத்துதலும் இவருக்கு இயல்பு. திருத்தில்லையில் அருளிச் செய்த பகுதியில் இவர்தம் ஆராய்ச்சி ஆழ்ந்தும், அகன்றும் செல்லுதலை நன்கு காணலாம். இப்படித்தான் மணிவாசகம் என்ற தொடர் அமைந்ததற்கு (பக்.26, 21, 28) ஆசிரியர் காட்டும் அகப்புறச் சான்றுகளும் ஆகும். இடையிடையே மணிவாசகப் பெருமானுக்கும் தில்லைக் கூத்தனுக்கும் மானசீகமாக நிகழ்ந்த பேச்சினை நேர்முக நடையில் சிறுகதை போக்கில் ஆங்காங்கே ஆசிரியர் தந்து செல்வது பூஞ்சோலையில் நடைபயில்வதுபோலக் கற்பவர் நெஞ்சம் எளிதில் நூலில் உலவ இடந்தருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/15&oldid=864036" இலிருந்து மீள்விக்கப்பட்டது