பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 மாணிக்கவாசகர்



இன்றாள். அதைக்கேட்ட கூலியாள் "இளைப்பின்றி விறகு சுமப்பேன்; தண்ணீர் சுமப்பேன். மண் சுமக்க மாட்டேனா? என்ன கூலிதருவாய்? எனக் கேட்கின்றான். தம்பி, என்னிடத்தில் பொருள் இல்லை." வெய்தாய் நறுவிதாய் வேண்டுமளவும் நுகரத்தக்க இன்சுவையுடையதாய் என்பாலுள்ள பிட்டமுதினைக் கூலியாக முற்படத் தருவேன்' என்கின்றாள். "பாட்டி, நீ சொக்கனிடத்துப் பேரன்பு பூண்டவள். உதிராத பிட்டினைத் தர வேண்டும் என்பதில்லை. உதிர்ந்த பிட்டையும் விருப்புடன் உண்பேன்" என்று மறுமொழி பகர்கின்றான். கூலியாளும் பிட்டை மடிநிறைய வாங்கிக் கட்டிக் கொண்டு வைகைக் கரையை அடைகின்றான். இறைவனாகிய கூலியாள் தான் பெற்ற சுவை நிறைந்த பிட்டினை வைகைக் கரையில் பணியாற்றும் ஏனை யோர்க்கும் கொடுத்துத் தானும் உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடுகின்றான். தன்னிடமிருந்த பிட்டு தீர்ந்தவுடன் புழுதி படிந்த மேனியோடு வந்தியிடம் சென்று, 'அன்னையே மண் சுமந்து இளைத்தேன். உன் பங்குக்குரிய கரைப்பகுதியில் பெரும்பாலும் அடைத்து விட்டேன். சொக்கன் ஆணை’ என்கின்றான். வந்தியும் அவன் மொழியினை நம்பி மேலும் பிட்டமுதினை நிறைய அளிக்கின்றாள். அதனைப் பெற்று முன்போலவே ஏனையோர்க்கும் கொடுத்துத் தானும் உண்டு கரையை அடைப்பவன்போல் அங்குமிங்கும் திரிகின்றான். சில இடங்களில் கரையினை உடைத்தும் விடுகின்றான். இந்நிலையில் கணக்கர்கள் அவ்விடம் வருகின்றனர். அவன் அவர்க்கு முன் சென்று, ‘என்னை யொப்பவர் ஒருவரும் இலர். என்னை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்’ எனக் கூறுகின்றான். அங்குள்ள பணியாளர்கள் இவனுடைய குறைகளைச் சொல்லுகின்றனர். எனினும் இவனால் தமக்குத் தீங்கு நேர்தலாகாதென்று அஞ்சிய கணக்கர்கள்