உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134 மாணிக்கவாசகர்



கொடுத்த கரை அடைக்கப் பெறாது வெள்ளத்தால் அறுக்கப்பெற்றுச் சிதைவுறுதலைக் காண்கின்றனர். அருகே பணிசெய்யும் சிற்றாட்களை நோக்கி, இது யாருடைய பங்கு? எனக் கேட்க அவர்களும் இது பிட்டுவாணிச்சியின் பங்கு'என்று உரைத்து அவளுடைய ஆள் செய்த குறும்புகளை யெல்லாம் எடுத்துக் கூறுகின்றனர். சினமுற்ற தண்டத் தலைவர்கள் பிட்டுவாணிச்சியின் கொற்றாளைக் கண்டு நீ சிறிதும் அச்சமின்றி மண்சுமவாமல் இவ்வாறு விளையாடித் திரிவதற்குரிய காரணம் என்ன? எனக் கேட்க, அவனும் காரணம் ஒன்றும் இல்லை. கழுத்து நோவச் சுமப்பேன்’ எனக் கூறுகின்றான். இனி நீ விரைந்து சென்று மண் சுமக்க வில்லையானால், நன்றாக அடிப்போம்,' என அவர்கள் அவனை அச்சுறுத்துகின்றனர். அவன் மிக அஞ்சியவன் போல ஒரு கூடை மண்ணை வெட்டி எடுத்து தலைமேல் சுமந்து கொண்டு இட்ட அடிநோவ, எடுத்த அடி கொப் பனிப்ப அடிமேல் அடிவைத்து நடக்கின்றான்.

இதனைக் கண்ட தண்டத் தலைவர் இக் கொற்றாளால் சிறிதும் பயன் இல்லை. இவன் உடைப்பினை ஒழுங்காக அடைக்க மாட்டான், எனச் சினந்து அவனைப் பிடித்து நடுமுதுகிற் சிவக்க அடிக்கின்றனர். இந்நிலையில் கொற்றாளாய் வந்த இறைவன் தன் முதுகிற் சுமந்த கூடை மண்ணை வைகைக்கரை உயரும்படி அதன்மீது கொட்டிவிட்டு புன்முறுவல் பூத்தவனாய் ' என்னை ஏன் அடிக்கின்றீர்கள்? என்று கூறிக் கொண்டே கொற்றாட்கள் கூட்டத்திடையே புகுந்து மறைகின்றான்.15 தண்டத் தலைவர் அவனைத்


15 பரஞ்சோதி முனிவர் திருவிளையாடவில் பாண்டியன் பொற்பிரம்பால் ஓங்கி அடித்ததாகக் கூறப்பெற்றுள்ளது.

  கண்டனன் கனன்று வேந்தன்
     கையிற்பொற் பிரம்பு வாங்கி 
  அண்டமும் அளவிலாத உயிர்களும் ஆக மாகக்