பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் அருளிச் செயல்கள் 139


 இல்லாமையும், நல்லன செய்தலும் பிழைசெய்தலும் கூட அருள் வசப்பட்டனவே என்பதையும் அறிவித்துத் தான் என்பது ஒரு பொருளுமின்றி மெலிந்ததால் அறிவிக்கும் பத்து குழைத்த பத்தாகும். ஆத்ம நிவேதனமாவது, விஞ்ஞான தீக்கையின் உடல் பொருள்களோடு ஒப்ப ஆன்மாவாகிய தன்னையும் சற்குரவன் கையில் தானஞ்செய்து அளித்தும், தானம் செய்து அளித்த பொருள் என்று அறியும் அறிவு சலியாமைப் பொருட்டு நாளும் நாளும் சிவபூசையில் செபகன்மங்களோடு ஒப்பச் "சிவோதாதா" என்னும் மந்திரம் ஒதி ஆன்மாவையும் சிவன் உடைமையாகப் பூ நீரோடு தானம் செய்து அளித்தல் (சிவஞான மாபாடியம் - சூத்திரம்-6, அதிகர 2) என்று விளக்குவர் மாதவச் சிவஞான யோகிகள்.

இன்னொரு விதமாகக் கூறினால் இறைவனே ஆசிரியனாகத் தோன்றி மெய்ப்பொருளை அறிவுறுத்தருளுதலால் இருவகைப் பாசங்களும் தீர்ந்து பொருளைக் கேட்கும் முறையில் கேட்டுச் சிந்திக்கும் முறையில் சிந்தித்து ஆசிரியன்பால் பேரன்புடையராய் ஆன்மபோதம் அடங்கப் பெற்ற மணிவாசகப் பெருமான், ஒன்றினும் தோய்வற நிற்கும் இறைவனாகிய முதற்பொருளோடு ஒற்றித்து நின்று, "கூடாதே வாடாதே குழைந்திருப்பதான பேரன்பில் திளைத்திருக்கும் இயல்பினைப் புலப்படுத்தும் நிலையில் அருளிய திருப்பதிகம் இது என்பதாகும். ஆதலின் இது குழைத்த பத்து' என்னும் பெயருடைத்தாகின்றது. இப்பதிகத்தின்கண்,


1. குழைத்தபத்து திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்றதாகக் கடவுள் மாமுனிவர் பகர்வர். குருநாதர் தன்னை விட்டுப் பிரிந்த பிறகு அடிகள் ஆடியார் குழுவை வந்தடைந்து குருந்தின்கீழ் தெய்வபீடம் அமைத்து வழிபட்டிருந்த நாட்களில் இப்பத்து அருளிச் செய்யப்பெற்றதாகக் கூறுவர்.