பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 மாணிக்கவாசகர்




  அன்றே என்றன் ஆவியும்
     உடலும் உடைமை எல்லாமும் 
  குன்றே யனையாய் என்னையாட்
     கொண்ட போதே கொண்டிலையோ 
  இன்றோர் இடையூறெனக் குண்டோ?
     எண்டோள் முக்கண் எம்மானே! 
  நன்றே செய்வாய் பிழை செய்வாய் 
     நானோ இதற்கு நாயகமே (7) 

(அன்றே - ஆட்கொண்ட முற்காலத்திலேயே; உடைமை - செல்வம்)

என்பது ஏழாம் பாடல். இதனால் "நன்றே வரினும் தீதே வரினும் நான் அறிவது ஒன்றேனும் இல்லை; எல்லாம் உன் பரம்" என்கின்றார். இந்தத் திருப்பாடல் ஆத்ம நிவேதனத்தின் இயல்பினை நன்கு புலப்படுத்தல் காணலாம்.

"எனது உயிரை ஆண்டவனாகிய உனக்கு உரிமை செய்து அளித்தபின் என் உயிர்க்கு உளவாகும் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் யான் பொறுப்பாளி அல்லன்; என்னை உடையவனாகிய நீயே அவற்றுக்கு உரியன்’ என்பார், தீமை தன்மை முழுதும் நீ என்றும், நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே என்றும், ஆயக் கடவேன் நானோதான் என்னதோ இங்கதிகாரம், காயத் திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் (8) என்றும் அடிகள் இறைவனை நோக்கி முறையிட்டருளிய திறம் இங்கு நினைத்தற்குரியதாகும். இவ்விடத்தில்,

  எனதுஆவியுள் கலந்தபெரு
     நல்லுதவிக் கைம்மாறு
  எனதுஆவி தக்தொழிந்தேன்
     இனிமீள்வது என்பதொன்றுண்டோ?