பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் அருளிச் செயல்கள் i41



  எனதுஆவி ஆவியும் நீ
     பொழிலேழும் உண்டஎந்தாய்! 
  எனதுஆவி யார்?யான்ஆர்?
     தந்தெேகாண்டு ஆக்கினையே
                    - (திருவாய் 2.3 :4)

என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் ஈண்டு அநுசந்திக்கத் தக்கது. இப்பாசுரத்தின் ஆறாயிரப்படி பரம போக்கியம்; அது வருமாறு : “இப்படி எம்பெருமானோடு கலந்த கலவியாலுள்ள நிரவதிகப் பிரீதியாலே அறிவழிந்து "இவ்வாத்மா நம்முடையதன்று’ என்று நிரூபிக்க மாட்டா தாராய், அவன் தம்மொடு கலந்த இப்பெருநல் உதவிக்குக் கைம்மாறாகத் தம்முடைய ஆத்மாவை அவனுக்கு மீளா அடிமையாகக் கொடுத்து, பின்னையும் தம்முடைய சுவரூபத்தை உள்ளபடி விவேகித்து, தருகிற நான் யார்? தரப்புகுகின்ற இவ்வான்மாஆர்? பண்டேயுனக்கு சேஷமா யிருக்கின்ற இவ்வான்மாவை நீ கொண்டருளினாயத்தனையிறே என்கின்றார்" என்பதாகும். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் தரும் விளக்கம் : பண்ணின ஆத்ம சமர்ப்பணத்தைப்பற்றி அநுதாபப்படுவதாகச் சொல்லலாமோ? அப்படியானால்: அநுதாபயோக்கியங்களான பாவங்களைப் போலவே ஆத்ம சமர்ப்பணமும் ஒரு பாபந்தானேயாகும்; அது செய்யக்கூடாத காரியம் என்று ஏற்பட்டுவிடாதா? என்கின்ற கேள்வி பிறக்கும். இதனால் பூருவர்கள் அருளிச் செய்த சமாதானம் யாதெனில்; ஆத்ம சமர்ப்பணம் பண்ணுகையும் பண்ணினதற்காகப் பிறகு அநுதாபங்காட்டுகையும் ஆக இரண்டும் இவ்விபூதியில் மாறி மாறி நடந்தே தீரும் என்கின்றார்கள்” என்று கூறி ஸம்ஸார பீதியால் ஸமர்ப்பிக்கையும், ஸ்வரூப யாதாத்ம்யஜ்ஞாநத்தால் அநுசயிக்கையும் இரண்டும்