பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv எல்லாப் பொருளும் இதன்பால் உள' எனத் திருவள்ளுவர்தம் திருக்குறளை உலகம் போற்றி உரைக்கும். பேராசிரியர் சுப்புரெட்டியார் அவர்களும் மண்ணுலகத் திலும்-விண்ணுலகத்திலுமுள்ள எல்லாச் சிந்தனைகளையும் தமிழில் தந்துள்ளார்கள். அவர்தம் சிந்தனைகள் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வகை செய்வதோடு விண்ணிலும் ஒரு மச்சுவீடு கட்டிக்கொள்ளத் துணை செய்யவல்லன. பல்வேறு பொருள்பற்றி பற்பல வகைப்பாடுகளில் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் நூல் பல எழுதினாலும் இறையியல் பற்றிப் பயண நூல் போக்கில் எழுதுகின்ற வகை யில் அளவாலும், பொருளாலும் அதிகம் எழுதி இன்று முன்னணியில் இருப்பவர் ஆவர். இந்த வகையில் சாகித்திய அகதெமி இவரை நன்கு நினைவு கூர்தல் வேண்டும். மாணிக்கவாசகம் நெஞ்சுருக்கும் நீர்மையது; உண்மை தான். ஆனால், அதில் பொதிந்துள்ள சைவசித்தாந்தச் சிந்தனைகள் அறிந்து கொள்வதற்கு மிக அருமையானவை. மாணிக்கவாசகர் தம் அருள்பொழியும் சித்தாந்தக் கோட்டைக்குள் பயணம் செய்ய நம்மை மிக எளிதாக அழைத்துக் கொண்டு போகின்றார் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள். தொடக்கத்தையே பாருங்களேன். "தென்னா டுடைய சிவனே போற்றி எக்காட் டவர்க்கும் இறைவா போற்றி! என்று மாணிக்கவாசகர் போற்றும் பழம்பதியாகிய பாண்டி நாட்டில் வைகையாற்றங்கரையிலுள்ள திருவாதவூர் என்பது ஒரு சிற்றுார். மதுரைக்குக் கிழக்கே சுமார் 12கல் தொலைவி லுள்ளது: பேருந்து வசதியுண்டு. இன்றளவும் சாலை நன்கு சீர்படவில்லை. 1979ஆம் ஆண்டு மே மாதம் கொடைக் ಕಿತ್ಲು 10 நாள் என் மனைவியுடன் தங்கி மதுரைக்கு ఉ ఉ 5ఖ్. மங்கம்மாள் சத்திரத்தில் இடம் கிடைக்காததால் காலேஜ் அவுஸ் என்ற விடுதியில் இருவரும் தங்கினோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/16&oldid=864058" இலிருந்து மீள்விக்கப்பட்டது