பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142 மாணிக்கவாசகர்



யாவந்மோக்ஷம் அதுவர்த்திக்கக் கடவது” என்ற பெரிய வாச்சான் பிள்ளையின் ஸ்ரீசூக்தியையும் காட்டுவர்.


27. அருட்பத்து (29)

2 இறைவனது திருவருளை வேண்டிப் போற்றிய பத்துப் பாடல்களையுடைய பதிகமாதலின் அருட்பத்து என்ற திருப்பெயரினை உடைத்தாகிறது. திருப்பெருந்துறையில் குருந்தமரத்து நிழலில் குருவாக எழுந்தருளி வந்து தம்மை ஆண்டருளிய பெருமானை நினைந்து சோதியே சுடரே, சூழொளி விளக்கே ஆதியே? என அன்பினால் அழைத்து 'அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே' என்று பாடல் தோறும் இறைவனது அருளை வேண்டிப் பரவிப் போற்றி மதுரையில் தாம் படும் இடரைக் களையுமாறு வேண்டுவதாகக் கொள்ளல் பொருத்தமுடையதாக இருப்பதால் நம்பி திருவிளையாடல் இப்பதிகம் மதுரையில் அருளிச் செய்யப் பெற்றதாகக் கருதுகிறது போலும். இஃது இப்பதிகத்தின்,

  திருந்துவார் பொழில்சூழ் திருப்பெரும் துறையில்
     செழுமலர்க் குருந்தமே வியசீர் 
  இருந்தவா றெண்ணி யேசறா நினைந்திட்டு 
     என்னுடை எம்பிரான் என்றென்(று) 
  அருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
     அலைகடல் அதனுளே நின்று 
  பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
     போதரா யென்(று) அருளாயே (10)

(ஏசறா வருந்தி; போதராய் - வா)


2. இதனைத் திருப்பெருந்துறையில் அருளப் பெற்தாகத் திருப்பெருந்துறைப் புராணம் குறிப்பிடுகின்றது. மதுரையில் தாம் இடர்பட்டபோது பழைய அநுபவத்தைக் நினைந்து பிரார்த்திப்பதாகக் கருதுவது பொருத்தந்தானே.