பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 மாணிக்கவாசகர் அடிகள் கண்களில் நீர்மல்கத் திருமுகம்வியர்க்கச் சிவபிரானை தினைந்து அடைக்கலப் பத்து பாடினதாக நம்பி திருவிளையாடல் குறிப்பிடும். 28. அடைக்கலப்பத்து (24) மற்ற அடியார்களைப் போலவே ஆண்டானுடன் சேரவிடாது தன்னைத் தடுத்து நிறுத்துவது வாசனாமலம் ஆதலின் அதற்கு அஞ்சி இறைவனிடம் அடைக்கலம் புகுவதை அறிவிப்பதால் இஃது அடைக்கலப் பத்து என்ற திருப்பெயர் பெறுகின்றது. இதற்குப் பக்குவ நிண்ணயம்-அதாவது வித்தும் அங்குரமும் போல என்றல்' என்பது பண்டைய குறிப்புரை, வித்தின் தன்மை அங்குரத்தில் காணப்படுவது போல, விரையொன்று போட்டால் சுரையொன்று முளைக்காதவாறு போல, வாசனாமலம் கெடாத ஆன்மா திருவடிகளுக்கு இலக்கு ஆகாது. உயிர் மலமாசு நீங்கி இறைவனது அருளார் இன்பப் பெருவாழ்வை அடைதற்குரிய பக்குவத்தை அடைந்தது என உறுதி செய்தற்குரிய அடையாளமாதலின், இதற்குப் :பக்குவ நிண்ணயம் எனப் பண்டையோர் கொண்ட கருத்து மிகவும் பொருத்தமுடையதாகின்றது. 'அழுக்கு மனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே (1) என்றும், வல்வினையேன் உன் அடைக்கலமே' (6) என்றும், கெடுவேன் உன் அடைக்கலமே (8) என்றும் கூறுவதால் தடையும் அதனை நீக்கும் உபாயமும் வருவித்து வேண்டிக் கொள்ளு கின்றார் அடிகள். இப்பதிகத்தில். 3. இதனைத் திருப்பெருந்துறையில் அருளியதாக திருவாதவூர்ப் புராணத்தில் கடவுள் மாமுனிவர் கூறுவர். குருவாய் வந்த இறைவன் மறைந்த பிறகு வாதவூரடிகள் அடியார் குழுவை வந்தடைந்து ஆந்தின்கீழ்த் தெய்வபீடம் அமைத்து இறைவன் திருவடிகளை வழிபட்டிருந்தார். இந்த நாட்களில் பாடியது இப்பத்து என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/162&oldid=864063" இலிருந்து மீள்விக்கப்பட்டது