பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலவாய் அருளிச் செயல்கள் i43 வழங்குகின் றாய்க்குன் னருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின் றேன்.விக் கினேன்வினை யேனென் விதியின்மையால் தழங்கருக் தேனன்ன தண்ணீர் பருகத்தக் துய்யக்கொள்ளாய் அழுங்குகின்றேனுடையாய்அடி யேனுன் அடைக்கலமே (10) (தழங்கு ஒலிக்கின்ற; அழுங்குகின்றேன் - வருந்து கின்றேன்) என்பது பத்தாம் பாடல். அடைக்கலம் என்பது, தனக்கு இன்றியமையாத உடைமைப் பொருளைப் பகைவர் முதலியோரால் உளவாம் கேடுகளை நீக்கிப் பாதுகாத்துத் தரவல்ல தக்கவர்பால் ஒப்படைத்தலாகும். அடிமையாகிய தன்னை உணர்வுடைய உயிராகக் கருதாது உணர்வற் ற உரிமைப் பொருள் போன்று எண்ணி ஏற்றுக் கொள்ளுமாறு இறைவன்பால் அடைக்கலம் புகுதல் அன்பிற் சிறந்த மெய்யடியார்களின் இயல்பாகும். படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் னாவிற் கொண்டேன் இடைக்கல மல்லேன் எழுபிறப் பும் உனக் காட்செய் கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் துt றணிந்துன் அடைக்கலம் கண்டாய் அணிதில் லைச்சிற் றம்பலத் தரனே — 4.81 × 8 என்ற அப்பர் பெருமான் திருமொழி ஈண்டு நினைத்தல் தகும். upm-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/163&oldid=864065" இலிருந்து மீள்விக்கப்பட்டது