பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலவாய் அருளிச் செயல்கள் 151 என வரும் ஏழாம் திருப்பாடல் குருவாய் வந்து அருள் புரிந்த இறைவன் மீண்டும் குதிரைச் சேவகனாக எழுத்தருளிய திருக்கோலத்தினை இனிது புலப்படுத்துவதாகஅமைகின்றது. தாளி யறுகினர் சந்தனச் சாந்தினர் ஆளெம்மை யாள்வரால் அன்னே யென்னும் ஆளெம்மை யாளும் அடிகளார் தங்கையில் தாள மிருந்தவா றன்னே யென்னும்(8) (தாளி - தாளிக் கொடி அறுகு - அறுகம் புல்) என்ற எட்டாம் திருப்பாடலில் இறைவன் குருவாய் எழுந் தருளி வந்து அடிகளை ஆட்கொண்ட நிலையில்அம்முதல்வன் பரமனையே பாடுவார்' என்னும் அடியார் திருக்கூட்டத்துள் ஒருவராய்த் தமது கையில் தாளத்தைக் கொண்டிருந்த தோற்றத் தினை நன்கு புலப்படுத்துவதைக் காணலாம். 31. திருவேசறவு (38): வாதவூரடிகள் அளவிலாத் துயரத் தால் மனங்கலங்கிச் சிறையிலே துன்புறுங்காலத்துப் பாடியது இப்பனுவல். ஒன்றற்கும் பற்றாத இழிந்த நரியை அரசர்க் குரிய அங்கமாகிய குதிரையாக ஆக்கியது போல, தன்னையும் பெரிதாக்கித் திருவடிக்கீழ் வைத்த பெருமைதான் என்னே என்று வேசற்றுக் கூறுதல். இச்செய்தி திருப்பெருந்துறைப் புராணத்தால் அறியப்படும். வேசறுதல்-மனங்குழைந்து இரங்குதல். 8. திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பெற்ற தாகக் கடவுண் மாமுனிவர் கூறுவர். 9. அடிகள் திருப்பெருந்துறையில் இறைவன் திருவடி களை வழிபட்டிருக்கும் நாட்களில் 'திருவேசறவு என்ற இத்திருப்பதிகத்தை அருளியதாகக் கடவுண் மாமுனிவர் கூறுவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/169&oldid=864076" இலிருந்து மீள்விக்கப்பட்டது