RW வந்த மறுநாள் காலை மாணிக்கவாசகப் பெருமான் அவதரித்த திருத்தலத்தைப் பார்க்கவேண்டும் என்ற அவா எங்கள் மனத்தில் எழுந்தது.” சேரன் கலம் ஒன்று கடலில் சென்றால் அடுத்து வேறொன்றும் செல்ல இயலாது என்று பண்டைத்தமிழ்ச் சான்றோர் ஒருவர் பாடியுள்ளார். அப்படித்தான் பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் ஒருவரைப் பற்றி, ஒரு நூலைப் பற்றி எழுதிவிட்டால் பின் வருபவர் எழுலுதற்கு வேறொன்றும் இல்லாது போய்விடும். அவ்வாறு பல நோக்குகளில் நூல் எழுதுதல் இவர்க்கே அமைந்த பாங்கு. பயன்பட்ட நூல்கள், சொல்லடைவுகள் முதலியவற்றை முறையாக அமைத்து எந் நூலாயினும்-படைப்பிலக்கிய மாயினும் ஆராய்ச்சி நூலாயினும்-பதிப்பித்தல் இவருக்குக் கைவந்த கலை. இந்நூலிலும் அத்தகு பின்னிணைப்புகள் : 1. பயன்பட்ட நூல்கள், 2. பழமொழிகள், 3, புராண வரலாறுகள் 4. மாணிக்கவாசகர் வழிபட்ட தலங்கள் எனப் பல அமைந்து நூலுக்கு ஒரு முழுமை தருதலைக் காணலாம். ஆராய்ச்சிக்கும், அகங்குழைந்த பொருள் உணர்வுக்கும் உதவவல்ல இந்த நூல் சைவ அன்பர்களும், தமிழ் ஆய்வாளர்களும், கவிதை ஆர்வலர்களும் படித்துப் பயன் பெறவேண்டிய ஒப்பற்ற நூலாகும். இத்தகைய நூல் பல எழுதித் திருவேங்கடவன் திருவருளால், பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்: வாழவேண்டி அமைகிறேன். 11, பேராசிரியர் குடியிருப்பு பிரகாசம் நகர், திருப்பதி-517502 16-5-1989 பொன். செனரிராஜன்
பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/17
Appearance