பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆலவாய் அருளிச் செயல்கள். 153 இதனைத் தொடர்ந்து நாய்க்குப் பொற்றவிசு இடுமாறு: போன்று தமக்குப் பொன்னருள் சுரந்து (5) அஞ்சேல்' என்றருளி (6) அகம் நெகவே புகுந்து ஆட்கொண்டருளிய(7) சீர்த்தியையும் தமக்குத் திருவைந் தெழுத்தினை, உபதேசித் தருளித் தானே உள்ளம் புகுந்து தேனாய் இன்னமுதமுமாய்த் தித்தித்தருளிய திறத்தினையும் (10) அடிகள் இத்திருப்பாடல் களில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளமை ஓதி அநுபவிக்கலாம் சிவபுராணம் (1) 'இது சிவனது அநாதி முறைமை யான பழமையை விரித்துரைப்பதால் சிவபுராணம் என்ற பெயர் பெறுகின்றது, புராணம்-பழமை. பழமையில், காலத்தொடுபட்டபழமையும் காலங் கடந்த பழமையும் என இருவகையுண்டு. இறைவனது பழமை காலங்கடந்ததாகலின் அநாதி முறைமையான பழமை எனப்படுகின்றது. சிந்தை மகிழச் சிவபுராணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பன்யான் (19-20) என இதற்கண் அடிகள் குறிப்பிடுதலான் ೯ಮಿ೯T # அநாதி முறைமையான ப்ழம்ை என்னும் ஒருபொருளே துதலியது. இத்திருப்பாட்டு என்பது இனிது தெளிவாகும். இது 95 அடிகளையுடையது. ஒருபொருள் நுதலிய வெள்ளடி வியலால் திரியின்றி வருவது கலிவெண் பாட்டே. செய்யு -153 என்ற தொல்காப்பிய விதிப்படி அமைந்த கலிவெண் 10. இப்புராணத்தைத் திருப்பெருந்துஇறயில் அருளிய தாக உரைப்பர் கடவுண்மா முனிவர் திருவாதஆரர் புராணத்தில்), குருவாய் எழுந்தருளிய இறைவன் மறைந்ததும், அடிகள் அடியார் கு ழு வில் வந்தடைந்து குருந்தின் கீழ்த்தெய்வபீடம் அமைந்து இறைவன் திருவடிகளை வ ழிபட்டிருக்கும் நாட்களில் இப்புராணம் பாடினார் என்பர். முதலில் பாடிய பனுவல் இதுவே என்றும் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/171&oldid=864082" இலிருந்து மீள்விக்கப்பட்டது