பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மாணிக்கவாசகர் பாட்டாகும். இது கடவுட் பராய முன்னிலைக்கண் வந்த பாடாண் பாட்டு என்பர் மறைமலையடிகள். விசும்பில் தோன்றிய அருள் வாக்கின்படி பாண்டியன் மணிவாசகப் பெருமானை அவர் திருவுளப் பாங்கின்படி இருக்கலாம் எனத் துதித்துப் போற்றுகின்றான். பாண்டி யனால் உபசரிக்கப்பெற்ற திருவாத ஆடிக்ள் மன்னனை நோக்கி விசும்பில் தோன்றிய வார்த்தையினை இறைவனது அருள்வாக்கென்றே தெளிந்தாய். நின்னைச் சார்ந்து ஒழுகின் மையால் இத்தகைய திருவருட்பேற்றினைப் பெற்றேன். நீங்குதற்கரிய பிறவித் தொடர்பையும் அறுத்து உய்ந்தேன். இனி என்வழிச் செல்வேன், இன்று எம்பெருமானாகிய கடவுள் உண்டு என ஐயமற உணர்ந்த மெய்யுணர்வால் நினது செல்வம் தீங்கின்றி மேன்மேலும் பெருகி யோங்குக. எனக்கூறி 'நமச்சிவாய வாழ்க’ என்றெடுத்து சிவபுராணத்தை ஓதிக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் புறப்படுகின்றார், இவ்வாறு நம்பி திருவிளையாடல் கூறுகின்றது. 枣 裳 张 இறைவனது பேரருட்டிறத்தை நினைந்துருகிய மணி வாசகப் பெருமான் கமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகமம் ஆகிகின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அநேகன் இறைவனடிவாழ்க. (1–2) (நமச்சிவாய தூலபஞ்சாக்கரம்; நாதன் - திருவைந் தெழுத்தின் ஒலியிலுள்ளதாகிய நாத வடிவினன்; கோகழி , திருப்பெருந்துறை: ஆகமம் - உயிர்கட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/172&oldid=864084" இலிருந்து மீள்விக்கப்பட்டது